பக்கம்:தேவநேயம் 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 தேவநேயம் தேவநேயம் மொழிவளர்ச்சியில் சொற்கள் பல்குதற் பொருட்டு அறுவகைச் செய்யுள் திரிபுகளும், மூவகைப் புணர்ச்சி வேறுபாடு களும், முக்குறைகளும் முச்சேர்க்கைகளும் முன்னோரால் கையாளப் பெற்றுள்ளன. முச்சேர்க்கையாவன முதற்சேர்க்கை, இடைச் சேர்க்கை, கடைச்சேர்க்கை. ஒருபொருளின் சிறப்பியல்பு அப்பொருள் முழுதும் தழுவுதல் ஒருமருங்கு தழுவுதல் என இருவகைப்படும். முழுதும் தழுவுதல்: பரிதி (வட்டமானது) ஒரு மருங்கு தழுவுதல்: வாழை (வழவழப் பானது) ஒருவினைப்பகுதி பல விகுதிகளை ஏற்றுப் பல தொழிற் பெயர்களை ஆக்குதல் இயல்பு: உவ என்னும் பகுதி தல், கை, பு, உ, மை, மம், மானம், என்னும் பல விகுதிகளை ஏற்று முறையே உவத்தல், உவகை, உவப்பு, உவவு, உவமை, உவமம், உவமானம் என்னும் பல தொழிற்பெயர்களைத் தோற்றுவிக்கும். ஓர் அடிச்சொல் பொருள் கருதிப் பல அடிகளாக விரியும்: கர் - கரி, கரு, கறு கார் - கால் - காய் கல் - கன் - கள் - காள் - காழ் கள் - களம் - களகம் - கழகம் கள் - கண் - கணம் குல் - குலம் - குலை - குலவு 'அம்' ஈறு, ஒரு பெருமைப் பொருள் பின்னொட்டு: எ-டு: மதி - மதியம் (முழுமதி) நிலை - நிலையம் 'இல்' ஈறு, ஒரு குறுமைப் பொருள் பின்னொட்டு: எ-டு: தொட்டி - தொட்டில் குடி - குடில், 'கை' ஈறு குறுமைப் பொருள்தரல்: கன்னி - கன்னிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/135&oldid=1431486" இலிருந்து மீள்விக்கப்பட்டது