பக்கம்:தேவநேயம் 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொல்லியல் நெறிமுறை பாவாணர் 'மணி' - ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு தக்காளி இனத்தில் சிறியது மணித்தக்காளி மணி - முன்னொட்டு. 'குட்டி' - ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு: எ-டு: குட்டிப் பை (சிறுபை) குட்டியப்பா (சிற்றப்பா) திரம் - தொழிற்பெயர் விகுதி: திரம் - மந்திரம், இயந்திரம் மானம் என்னும் சொல் தொழிற்பெயர் ஈறாய் வரும். எ-க: அடைமானம் கட்டுமானம், தீர்மானம், படிமானம், பிடிமானம், பெறுமானம், வருமானம். மகன் என்னும் சொல் வருமொழியாகவும் ஈறாகவும் வருங்கால் 'மான்' என்று மருவும். எ-டு: மருமகன் - மருமான் பெருமகன் - பெருமான். இரு குறில் ஒரு நெடிலாகத் திரியும் என்பது திரிவுமுறை: எ-டு: அகல் - ஆல் (விழுதூன்றிப் படரும் ஆலமரம்). வணங்கு - வாங்கு (வளைவு) நிலத்தினின்று மேலெழும் மரம் செடிகொடிகட்கும், மண்ணினின்று விண்ணிற் கெழும் பறவையினங்கட்கும் முன்னேற்றம் மேற் செலவாய் இருத்தலால் உகரச் சுட்டு உயரக் கருத்தையும் தழுவலாயிற்று. உக்கம் = தலை, உயரம் உச்சி = முடி உச்சாணி = உச்சாணிக் கிளை. உகரத்தை ஒலிக்குங்கால் இதழ்குவித்து முன்னோக்குவதால் உகரச் சுட்டு முதற்கண் பேசுவோனின் முன்னிடத்தைக் குறித்தது. உதுக்காண் = என் முன் பார் உதா, உதோ, உந்த, உங்கு, உகரவடித் திரிபு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/136&oldid=1431487" இலிருந்து மீள்விக்கப்பட்டது