பக்கம்:தேவநேயம் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 தேவநேயம் தேவநேயம் உகரம், ஊகார ஒகர ஓகாரங்களுள் ஒன்றாவது முன்னைத் திரிபு. உகரம் அகரமாவது அன்னைத் திரிபு. உகரம் இகரமாவது பின்னைத் திரிபு. எ-டு: புழை - பூழை, குட்டு - கொட்டு = முன்னைத் திரிபு. முடங்கு - மடங்கு - அன்னைத் திரிபு. புரள் - பிறழ் - பின்னைத் திரிபு. உகரம் அகரமாகத் திரியும் திரிவுமுறை; எ-டு: குடும்பு - கடும்பு. நுரை - நரை (வெண்மை ) முடங்கு - மடங்கு உகர ஊகாரம் முறையே இகர ஈகாரமாகத் திரிதல் எ-டு: புரண்டை - பிரண்டை தூண்டு - தீண்டு, 'உ'கர ஈறு சிலசொற்களில் ‘சு'கர ஈறாகத் திரியும் எ-டு: ஏவு - ஏசு; பரவு - பரசு; விரவு - விரசு; துளவு - துளசு, துளசி; அரவு - அரசு. உகரச் சொல் முன்மைக் கருத்திலும் உயர்ச்சிக்கருத்திலும் வகர மெய்ச் சேர்க்கை பெறுவது போன்றே ஒப்புமைக் கருத்திலும் பெறும். உவ் - உவக்காண் - முன்மைச் சுட்டு, உவ்வி - (தலை) - உவ - உவண் - உவணை உயர்ச்சிக் கருத்து. உவ் - உவ - (உவர்) - இவர் - ஒப்புமைக் கருத்து, இவர்தல் = ஒத்தல், அகரம் சகரமாகத் திரியும் அவை - சவை. இயை - இசை = இசைதல் இயை - எய் - ஏய் = பொருந்துதல் ஏய் - ஏ; இசைதல் பொருள் எண்ணுப் பொருளில் 'ஏ' ஆகக் கடைக்குறை ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/137&oldid=1431488" இலிருந்து மீள்விக்கப்பட்டது