பக்கம்:தேவநேயம் 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் 131 அ* a. ஒரு வியங்கோள் வினை யீறு; an opt. verbal ending. எ-டு: வரப்புயர, வியங்கோள் வினையெல்லாம் முற்றே. அ" a. இறந்தகால நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்ச வீறு; arel. participial ending. எ-டு: வந்த , வருகின்ற. அ" a. ஒரு (குறிப்புப்) பெயரெச்ச வீறு; an adj. ending. எ-டு: நல்ல, சிறிய. அ"' a. ஒரு நிகழ்கால (எதிர்காலப் பொருட்டு) வினையெச்ச வீறு; an infinitive suf. எ-டு: உண்ண . அ" a. ஒரு சொல்லாக்க ஈறு; formative particle. எ-டு: குல்-கல்-கல, பிள்-பிள. « a. சில பெயர்களின் ஆகார வீற்றுக் குறுக்கம்; shortening of 'aa' ending certain nouns. எ-டு: இரா-இர, களா-கள, நிலா-நில, புறா" அ° a. குறிலில் இறும் வண்ணப்பாட்டுச் சீர்களின் அல்லது அசைகளின் வண்ணக் குழிப்பு வாய்பாட்டீறு; ending of rhythmatic patterns of metrical feet and syllebles ending in a short vowel. எ-டு: தன, தனன, தான, தத்த, தந்த, தய்ய, தனத்த, தனந்த அ. நெடுங்க ணக்குப் பெயருறுப்பு : part of a name of the alphabet. 'அஆ' = நெடுங்கணக்கு. எ-டு: உனக்கு 'அஆ' தெரியுமா? இதை 'அ'ன 'ஆ'வன்னா என்றது பண்டை வழக்கு. அ' a. உகர முதல் திரிபு சொல்லாக்கத்தில் உகரமுதல் அகர முதலாகத் திரிவதுண்டு. எ-டு: உகை (செலுத்து) - அகை, குட்டை - கட்டை , குடும்பு - கடும்பு, குடை(தல்) - கடை(தல்), சுரி (வளையல்) - சரி, துளிர் - தளிர், துணை - தனை (எத்துணை - எத்தனை, வருந்துணையும் - வருந்தனையும்), நுரை (வெண்மை ) - நரை, புரி - பரி (வளை), புரம் (உயர்ந்த இடம் அல்லது கட்டிடம். எ-டு: பரவெளி, கோபுரம்) - பரம் - வரம் - வரன் (மேலான வீட்டுநிலம்), முடங்கு - மடங்கு முடி - மடி (இற), முயங்கு - மயங்கு. இத் திரிபினால், சில சொற்களின் மூலத்தையும் சில சொற்களைப் புனையும் வகையையும் அறியலாம். 4.குறி அ" a, 1, எட்டு என்னும் எண்ணின் குறியாக 'அ' சுழியின்றி எழுதப்ப டுவது; symbol of the number eight, written without the loop. 2. ஐம்புள்ளுள் (பஞ்சபட்சியுள்) ஒன்றாய் வல்லூற்றைக் குறிக்கும் எழுத்து ; letter representing the vulture one of the five astrologically important birds.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/148&oldid=1431634" இலிருந்து மீள்விக்கப்பட்டது