பக்கம்:தேவநேயம் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 தேவநேயம் «* a. மொழி முதல் எழுத்துகளுள் ஒன்று. எ-டு: அவன். (எட்டென்னும் எண்குறியும் வல்லூற்றின் குறியும்) எண் வகைப்பட்ட பொருளின் அல்லது பொருட்டொகுதியின் பெயர் முதலெழுத்தாகவும், வல்லூற்றின் பெயர் ஒன்றன் முதலெழுத்தாகவும் இருக்கலாம். இருபெயரும் இறந்து பட்டன போலும். வரலாறு 1. எழுத்து : ஆ - அ. அகரம் ஆகாரத்தின் குறுக்கம். உயிரொலிக ளெல்லாம் பெரும்பாலும் இயற்கையாக நெடிலாகவே தோன்றிப் பின்பு குறுகின. 2. சொல் : அம் = அழகு, அம் - அ', அ' = எழுத்துகட்கு முதலாகிய அகரம் போல் உலகங்கட்கு முதலாகிய இறைவன், அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. (குறள் 11 இறைவனைக் குறிஞ்சி நிலத்துச் சேயோன் வழிபாட்டினர் சிவன் என்றும் முல்லை நிலத்து மாயோன் வழிபாட்டினர் திருமால் என்றும், குறித்தனர். கி.மு. 1500 ஆம் ஆண்டு போல் நாவலந் தேயத்திற்குட் புகுந்த சிறு தெய்வ வேள்விமத ஆரியர், சிவநெறியும் திருமால் நெறியும் ஆகிய இரு தூய தமிழ் மதங்களையும் ஆரியப் படுத்தற்கு முத்திருமேனி (திரிமூர்த்திக் கொள்கையைப் புகுத்தி, நான்முகன் (பிரமன்) என்னும் படைப்புத் தெய்வத்தைப் புதுவ தாகப் படைத்து, அத்தெய்வத்தையும் அகரத்தாற் குறித்தனர். சுக்கு, திப்பிலி என்னும் மருத்துவச் சரக்குகள், ஏதேனுமொரு கரணியம் பற்றி அகரம் என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம், அதைப் பிற்காலத்தார் 'அ' (அ) என்று குறித்திருக்கலாம். (புறச்சுட்டு ஆ = அந்த “ஆயீரியல” என்று (தொல். 17) செய்யுள் வழக்கிலும், ஆயாள் (மலையாளம்), ஆவூரு (தெலுங்கு) என்று உலக வழக்கிலும், ஆகாரம் சொல்லாகவே வழங்கிவருதல் காண்க ஆ - அ'. 3. சொல்லுறுப்பு ஆ (அகச்சுட்டு) - அ, ஆ - ஆகு - ஆங்கு - அங்கு, ஆது - அது. அல் - அ. ஒ.நோ. நல் - ந. அ (சொற்சாரியை) பெயரெச்ச வீறாயிருக்கலாம். அ' (எழுத்துச் சாரியை) நெடுங்கணக்கின் முதன்மையும் பலுக்கெளிமையும் பற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/149&oldid=1431636" இலிருந்து மீள்விக்கப்பட்டது