பக்கம்:தேவநேயம் 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

133 அ' (அசைச்சொல்) குறிப்புச் பெயரெச்ச வீறாயிருக்கலாம். அசைச் சொற்களெல்லாம் பொருள் குன்றிய அல்லது இழந்த சொற்களே. அ' (அயற்சொல் முன்னொட்டு) பலுக்கெளிமையும் ஆட்சியும் பற்றியது. பலுக்கு - உச்சரிப்பு. அ" (இரக்கக் குறிப்பு) இயற்கை பற்றியது. ஆ - அ. ஒ.நோ. E.ha.hah, அ"(ஆறாம் வேற்றுமை அஃறிணைப் பன்மையுருபு) பலவின் பாற் குறிப்பு வினைமுற்றீறு, கைகள் என - என கைகள் (சொன் முறை மாற்று). அ" (பலவின்பால் வினைமுற்றீறு) சுட்டாட்சி பற்றியது. அ" (வியங்கோள் வினைமுற்றீறு) அல்லீற்றுத் தொழிற்பெயரின் ஈறுகேடு. செய்யல் - செய்ய செயல் - செய. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல், (தொல். நூன்.15) அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல், தொல், சொல், கிளவி. 36) மக்கட் பதடி யெனல். (குறள் 1961. இவற்றில் தொழிற்பெயரே வியங்கோளாய் நிற்றல் காண்க. அ" (இறந்தகால நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்சவீறு) சுட்டாட்சி பற்றியது. செய்= செய்கை. செய் + அது= செய்யது - செய்து = செய்கையுடைய - வன் - வள் - வர் - து - வை. செய்கையுடையவன் - செய்தவன் = செய்தான், வினையுடைமை வினை முடிந்தமையை யுணர்த்தும். உண்டு என்னும் ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று. இன்று இரு திணை ஈரெண் மூவிட ஐம்பாற் பொதுவாய் வழங்குவது போன்றே. அது என்னும் சுட்டுச் சொல்லை ஈறாகக் கொண்ட செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினைச்சொல்லும், முதற்காலத்தில் வழங்கிற்று. உள் + அது = உள்ளது. உள் + து(அது) = உண்டு . செய்து + அ = செய்த = செய்த - வன் - வள் - வர் - அது - வை ஆன அந்த, செய்து என்னும் வாய்பாட்டு வினைச்சொல் முதற்காலத்தில் முற்று வினையாகவும், பின்னர் முற்று வினையும் எச்சமுமாகவும் வழங்கி, அதன்பின் ஐம்பாலீறு பெற்ற காலந் தொடங்கி எச்ச மாகவே வழங்கி வருகின்றது. செய்து என்னும் இறந்தகால வினைச்சொல் போன்றே, செய்கின்று என்னும் நிகழ்கால வினைச் சொல்லும் அகரவீறு பெற்றுப் பெயரெச்சமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/150&oldid=1431637" இலிருந்து மீள்விக்கப்பட்டது