பக்கம்:தேவநேயம் 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

134 தேவநேயம் அஃறிணை செய்கின்று + அ = செய்கின்ற - செய்கிற. செய்கின்று என்னும் வாய்பாட்டு வினைச் சொல் எச்சப் பொருளில் வழக்கற்றது. அ' (குறிப்புப் பெயரெச்சவீறு) சுட்டாட்சி பற்றியது. அ" (நிகழ்கால வினையெச்சவீறு அல்லீற்றுத் தொழிற் பெயரின் ஈறுகேட்டால் நேர்ந்தது. செய்யல் (வேண்டும்) - செய்ய (வேண்டும்). வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். (தொல். எழுத். தொகை. 14) அ* பொருள் வேறுபாடு பற்றியது. அ" பலுக்கெளிமை நோக்கியது. அ அகரத்தின் முதன்மையும் மாத்திரையும் பற்றியது. அ' முதற்குறிப்பு. சிறப்புக் குறிப்பு எழுத்துக்களை யெல்லாம் உயிரும் மெய்யும் எனக் கூறுப்படுத்தியும், உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பிறப்பும் ஒலியும் பற்றி முறைப்படுத்தியும், உயிருக்கும் மெய்க்கும் போன்றே உயிர்மெய்கட்கும் வேறு வரிவடிவமைத்தும், வண்ண மாலை (alphabet) முதன்முதலாக அமைக்கப்பெற்றது தமிழிலேயே. உயிரும் மெய்யும் மட்டுங்கொண்டது குறுங்கணக்கு என்றும், அவற்றொடு உயிர்மெய்யுங் கொண்டது நெடுங்கணக்கு என்றும், பெயர்பெறும். இருவகைக் கணக்கிலும் அகரமே தமிழின் முதலெழுத்தாம். வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த பின்னும், நீண்டகாலம் எழுத்தின்றித் தம் முதனூலாகிய வேதத்தை வாய்மொழியாகவே வழங்கி வந்ததனால், அஃது 'எழுதாக் கிளவி' எனப்பட்டது. தமிழரோடு தொடர்புகொண்ட பின்பே, முதலிற் கிரந்த வெழுத் தையும் பின்பு தேவநாகரியையும் 'அவர்' அமைத்துக் கொண்ட னர். இற்றைத் தமிழெழுத்திற்கும் அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்திற்கும் யாதொரு தொடர்புமில்லை. (போலிகை) அஃறிணை பகுத்தறிவில்லாத பொருள்களைக் குறிக்கும் சொற்களை அஃறிணை என்று வகுத்தனர். (சொல். 34)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/151&oldid=1431638" இலிருந்து மீள்விக்கப்பட்டது