பக்கம்:தேவநேயம் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138) தேவநேயம் அக்கினி ஆரியர் பிற்காலத்தில் வேத உருத்திரனைத் தமிழ்ச் சிவனொடு மயக்கிவிட்டதால், உருத்திராக்கம் என்னும் சொற்குச் சிவமுண்மணி அல்லது சிவமணி என்பதே பொருந்திய பொருளாம். (வ.வ. 63-65) அக்கினி அழல் - அழன் - அழனம் - தீ (பிங்.) அழல் - அழலி - நெருப்பு - தீ (பிங்.) அழலி - அழனி (அக்னி ) வ. அக்நி (agni) L. ignis. ழ - க. போலி. ஓ.நோ. மழ - மக, தொழு - தொகு, முழை - முகை. (த.இ.வ. 196) அக்கை அக்கை - அக்கா, அக்கோ - அகோ. ஒ.நோ. ஐயன் - ஐயோ ! அத்தன் - அத்தோ ! - அந்தோ ! அத்தன் - அச்சன் - அச்சோ ! அம்மை - அம்மோ! அம்மவோ! அன்னை - அன்னோ ! இங்கனம் பெற்றோர் பெயர்கள் பல்வேறு உணர்ச்சிக் குறிப் பிடைச் சொல்லாவது, தமிழிற் பெரும்பான்மையென அறிக, அக்கை என்னுஞ் சொல் தாயையும் மூத்த உடன் பிறந்தாளையும் குறிக்கும். (வ.வ. 65-66) அகத்தழகின் சிறப்பு முகத்தழகு யாவராலும் விரும்பப் படுவதொன்று. ஆனால் அகத் தழகு அதனினும் சிறந்தது. ஆதலால் அழகின்மையை யுணர்த்தும் பொல்லாங்கு பொல்லாப்பு என்னும் சொற்கட்கு, தீமை தீங்கு என்னும் பொருள்கள் ஏற்பட்டுள்ளன. பொல் என்பது அழகை யுணர்த்தும் பகாச் சொல், பொன்மை அழகு; பொல்லாமை அழகின்மை. பொல்-பொன் = அழகான தாது. பொல்+அம் = பொலம். பொலம் = பொன். பொலங்கழல் = பொற்கழல், பொல்+4 = பொற்பு. பொல்லுதல் = அழகாயிருத்தல், பொற்ற = அழகிய, நல்ல. பொற்ற கண்ணமெனப் புகழ்ந்தார் (சீவக. 885) என்றார் திருத்தக்க தேவர். பொல்லாத - பொல்லா = அழகில்லாத,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/155&oldid=1431643" இலிருந்து மீள்விக்கப்பட்டது