பக்கம்:தேவநேயம் 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்தியர் பாவாணர் 147) யும் வடசொற் கலவாத தனித்தமிழ் வழங்கியதென்றும் அது தமிழராலேயே வழங்கப்பட்டதென்றும் அறிந்துகொள்க. வடசொல்லைத் தமிழ்ச்செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச்ச.1) மொழிபெயர்ப்பை வழி நூல் வகைகளுள் ஒன்றாகவும் (மரபு.94) தொல்காப்பியர் கூறியது பொருந்தவில்லை . அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப்பிற்குத் தமிழில் இடமிருந்த தாகத் தெரியவில்லை. ஆனாலும், தொல்காப்பியத்தில் அங்ஙனங் கூறியிருப்பதால், அது தமிழினின்றும் மொழிபெயர்த்த வடநூல் களையே முதனூல்களாகக் காட்டும் ஆரிய ஏமாற்று, அவர்க்கு முன்னமே தொடங்கினதையே உணர்த்துவதாகும். அகத்தியர்க்குமுன் தமிழ் சற்றுத் தளர்ந்திருந்தமை அகத்தியர் காலத்திற்கு முன், தமிழ் நூல்கள் சிறிதுபோது கற்கப் படாதிருந்தமை, பின்வருங் காரணங்களால் விளங்கும். (1) அகத்தியர் முருகனை நோக்கித் தவங்கிடக்க, அத் தெய்வம் தோன்றி, அவர்க்குச் சில ஓலைச்சுவடிகளைக் காட்டிற்று என்ற கதை. (2) அகத்தியர் தமிழை உண்டாக்கினார் என்ற வழக்கு, (3) தொல்காப்பியப் பாயிரத்தில் 'முந்து நூல் கண்டு' என்று கூறியிருத்தல். அகத்தியர்க்கு முன்பே, சில ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்திருந் தனர். அவர்வயப்பட்டே பாண்டியன் தமிழைச் சிறிதுபோது வளர்க்காதிருந்திருக்க வேண்டும். கடைக்கழகத்திற்குப்பின், பாண்டியரிருந்தும் கழகம் நிறுவாமையும், வணங்காமுடி மாறன் பொய்யாமொழிப் புலவர் கழகம் நிறுவச் சொன்னமைக்கு இணங்காமையும் நோக்கியுணர்க. தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில தொன்னூல் களைக் கண்டமைபற்றியே, தொல்காப்பியர் என்று அவர் பெயர் பெறவும், "முந்து நூல் கண்டு” என்று பாயிரத்திற் குறிக்கவும் நேர்ந்ததென்க. இதை, பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் காலத்தில் கழக நூல்கள் அறியப்படா திருந்ததும், அவருக்குத் தெரியாத முது நூல்களை அவர் மாணாக்கரான டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் கண்டதுமான நிலைக்கு ஒப்பிடலாம். தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத முந்து நூல் கண்டமை பற்றியே, தம் நூலில் அகத்தியத்தைப்பற்றி எங்கேனும் குறிப்பிட வில்லை யென்க, தொல்காப்பியம் அகத்தியத்திற்குப் பிந்தின தாதலின், அதினும் சிறப்பாய் இலக்கண மெழுதப்பட்டது. அகத்தியம் வழக்கற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/164&oldid=1431655" இலிருந்து மீள்விக்கப்பட்டது