பக்கம்:தேவநேயம் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 தேவநேயம் அகப்பட்டி இதையறியாதார் பிற்காலத்தில், தொல்காப்பியர் அகத்தியத்தைச் சாவித்ததாக ஒரு கதை கட்டினர். அகத்தியர் தமிழ்நூற் பயிற்சியைப் புதுப்பித்தமை மேனாட்டில் முதன்முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ (Plato, B.C. 427) என்றும், அவர் பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லுமே கண்டுபிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிசிற்றாட்டில் (Aristotle, B.C. 384) இடைச் சொல்லும் எச்சமுங் கண்டுபிடித்தாரென்றும், மேனாட்டிலக் கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத் தக்கதும், டையோனி சியசு திராக்சு (Dionysius Thrax, B.C. 100) எழுதிய இலக்கணமே யென்றும் மாக்கசு முல்லர் கூறுகிறார். வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியிலிருந்தன. ஆயினும், அவை யாவும் வடமொழி முதற் பாவியமான வான்மீகி யிராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் முதன் முதல் ஆரிய மறைக்கே எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை . அவை ஆரியர் தமிழிலக் கணத்தை யறிந்தபின்னரே இயற்றப்பட்டவை. ஆரியர் தம் மறை நூல்களைத் தமிழர்க்கு நெடுங்காலம் மறைத்து வைத்தது, அவற்றின் தாழ்வு வெளியாகாமைப் பொருட்டே யன்றி, அவற்றின் தூய்மையைக் காத்தற் பொருட்டன்று. தமிழி லுள்ள கலை நூல்களை மொழி பெயர்த்தும், அவற்றை விரி வாக்கியும், வடமொழியிலக்கியத்தை மிக வளர்த்துக் கொண்ட பின்புங்கூட, அவர் தம் மறை நூல்களைத் தமிழர்க்கு நேரேயறி விக்கவேயில்லை. மேனாட்டாரே முதன் முதல் அவற்றைக் கற்றுத் தம் மொழிகளிற் பெயர்த்துத் தமிழர்க் கறிவித்தனர். இப்போது உண்மை வெளியாகிவிட்டதே யென்று, ஆரியர் தம் முன்னோர் கி.மு. 2500 ஆண்டுகட்குமுன் இயற்றிய எளிய மறைமொழிகட்கு, இவ்விருபதாம் நூற்றாண்டிற்குரிய விழுமிய கருத்துக்களையெல் லாம் பொருத்தியுரைக்கின்றனர். இதன் பொருந்தாமை ஆராய்ச்சி யில்லார்க்குப் புலனாகாது போயினும், அஃதுள்ளார்க்குப் போகாதென்க. ஒ.மொ. அகப்பட்டி தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி. பட்டி என்பது பட்டி மாடு. பட்டி மாடு போற் கட்டுக் காவலின்றித் திரிபவனைப் பட்டி என்றது உவமையாகு பெயர். நோதக்க செய்யும் சிறுபட்டி (கலித். 51 (தி.ம. 1074)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/165&oldid=1431656" இலிருந்து மீள்விக்கப்பட்டது