பக்கம்:தேவநேயம் 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகில் பாவாணர் 149 அகமணம் ஒரு குலத்தார் தம் குலத்திற்குள்ளேயே மணத்தல், இன்றுள்ள குலங்களுள், கலப்புக் குலங்கள் தவிர ஏனையவெல்லாம் அக மணத்தனவே, திணைமயக்கம் ஏற்படுமுன் குறவர், ஆயர், வேட்டு வர், உழவர், நுளையர் (செம்படவர்) எனத் தமிழர் ஐந்திணை மக்களாய் வெவ்வேறு நிலத்தில் வாழ்ந்த போது, அவர்க்குள் பெரும்பால் வழக்கமாய் நிகழ்ந்தது அகமணமே. (த.தி. 12) அகர மேற்றுதல் அகரம், மருத நிலத்து ஊர், அகரமேற்றலாவது, ஆயிரக்கணக் கான பிராமணரை வடநாட்டினின்று வருவித்துத் தமிழக மருத நிலத்து வளநகரில் குடியேற்றி, அதை அவர்க்குத் தானமாகக் கொடுத்தல், இதனை 'அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்' எனத் திருமூலர் கண்டித்தார். (த.இ.வ. 182) அகில் - அகரு(g). அகில் ஒருவகைக் கள்ளிமரத்தில் விளைவதென்பது, கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் என்னும் நான்மணிக்கடிகை (4) அடியால் அறியப்பெறும். கள்ளி என்பது பெரும்பாலும் முள்ளுள்ள நிலைத்திணை (தாவர ) வகை. தேக்குப் போல் அகிலும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் விளைவதாகும். குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் என்றது (பட்டினப். 188), உள் நாட்டகிலை. வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமும் சுமத்துடன் வந்த கொண்ட லொடு புகுந்து கோமகன் கூடல் என்றது (சிலப். 14:107.110) கீழ்நாட்டகிலை. பண்டைக் காலத்தில் இங்கிருந்து மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருள்களுள் அகிலும் ஒன்றாம். அது தமிழ்வணிகமேயன்றி ஆரிய வணிகமன்று. அக்கு = அகில் (மலை.) அக்கிலு = நெருஞ்சி (மூ.அ) அக்கு - (அக்கில்) - அகில், ம. அகில். Heb ahalin, Gk agallochon, L quillaria agallocha, E eagle - wood, s. aganu. மேலை மொழிகளிலெல்லாம் லகர வடிவும், வடமொழியில் அதன் திரிபான ரகர வடிவும் இருத்தலை நோக்குக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/166&oldid=1431657" இலிருந்து மீள்விக்கப்பட்டது