பக்கம்:தேவநேயம் 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 தேவநேயம் அகோ மானியர் வில்லியம்சு அகரமுதலியில் aganu என்பதை aguru என்றும் காட்டிப் பளுவில்லாதது ("not heavy") என்று சொற் பொருட் கரணியங் குறித்திருப்பது, அவர் சொந்தக் கைவரிசையே. அகோ - அஹா அகோ என்பது, மகிழ்ச்சி, வியப்பு, இரக்கம், துயரம் முதலிய உணர்ச்சிகளை வெளியிடும் குறிப்பிடைச் சொல். இது அக்கை என்னும் முறைப் பெயரின் விளிவேற்றுமையாம். அங்கணம் - அங்கண வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு, அங்குதல் = வளைதல், சாய்தல், அங்கு - அங்கணம் = வாட்டஞ்சாட்டமாயிருக்கும் சாலகம், சாலகம், சாய்கடை (சாக்கடை என்னும் பெயர்களும் இக்கரணியம் பற்றியவையே, வாட்டமாயில்லாவிட்டால் நீர் செல்லாது தேங்கி நிற்கும், அங்கணத்து ளுக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முற் கோட்டி கொளல் என்னும் குறளில் (720) உள்ள அங்கணம் என்னும் சொற்கு, பரிமேலழகர் முற்றம் என்று பொருளுரைத்திருப்பது பொருந் துவதன்று. கீழோர்க்கு உரைக்கும் மாணுரை வீண்படுவதற்குச் சாலகத்திற் கொட்டிய பாலே தக்க உவமையாம். அங்கு (ang) என்னும் முதனிலைக்குச் 'செல்' (to go) என்று பொருள் கூறி, உலாவுமிடம் அங்கணம் என்று கொள்ளும் வடவர் சொல்லியல் உத்திக்குப் பொருந்துவதன்று. (வ.வ. 67 : தி.ம. 720). | அங்கதம் - அங்கத அங்கு = வளை, அங்கதம் = வளையல், தோள் வளைவி. பொதுவாக உறுப்பைக் குறிக்கும் அங்கம் என்னும் வடசொல்லி னின்று அங்கதம் என்னும் சொற் பிறந்ததாக வடவர் கூறுவர். (வ.வ.67). அங்காடி பாரித்தல் ஒரு கடைக்காரன் பேரூதியம் கருதி அளவுக்கு மிஞ்சிய பண்டங்களைக் கடையிற் கொண்டு வந்து நிறைத்தலுக்கு 'அங்காடி பாரித்தல்' என்று பெயர். அவனைப் போலப் பேராசை யினால் ஒருவன் ஆகாத காரியத்தை நம்பி ஆகாயக் கோட்டை கட்டுவது அங்காடி பாரித்தல் எனப்படும். (சொல்12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/167&oldid=1431658" இலிருந்து மீள்விக்கப்பட்டது