பக்கம்:தேவநேயம் 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அசுரர் பாவாணர் அச்சாணி அச்சு, சக்கரங்கோத்த குறுக்கு உத்தரம். அச்சாணி, சக்கரம் கழலாதவாறு அச்சின் கடைசியில் செருகும் ஆணி. அதனால் கடையாணி எனவும் படும். (குறள். 667.) அட்டு குறுக்கு, அட்டு - அச்சு = வண்டிக்கும் தேர்க்கும் சக்கரம் கோப்பதற்குக் குறுக்காக அமைக்கப்படும் கட்டை அல்லது உத்தரம். அச்சு - அக்ஷ (வ.) (தி.ம. 735) அச்சு - அக்ஷ (axle) அட்டு - அட்டம் = குறுக்கு, அட்டு - அச்சு = குறுக்காக இருப்பது, உருள்கோத்த மரம் (வ.வ.67), அசுரர் புராணங்களிலும் புராணச் செய்தி குறிக்கும் இலக்கியங்களிலும் அசுரர் என்னும் வகுப்பாரைப்பற்றி அடிக்கடி படிக்கின்றோம். அவருள் கயமுகாசுரன், சம்பராசுரன், தாரகாசுரன், நரகாசுரன், பகாசுரன், விருத்திராசுரன், முதலிய சிலர் மிகப் பெயர் பெற்றவர். அசுரரெல்லாரும். இயல்பாகக் மிகக் கொடியவரென்றே கூறப்படுகின்றனர். இவ் வசுரர் யார்? சுரர் என்னும் தேவருக்குப் பகைவர் என்றும், விசும்பில் (ஆகாயத்தில்) இயங்கக்கூடிய பதினெண் கணத்தாருள் ஒரு கணத்தார் (கூட்டத்தார்) என்றும் அரக்கரைப்போலக் கொடியவரென்றும், பண்டைநாளில் இந்தியா முழுவதும் இருந்தவரென்றும், அடியார் முறையீட்டின்பின் அவ்வப்போது சிவனால் அல்லது திருமாலால் அழிக்கப்பட்டவரென்றும், புராணங் கூறும், சுரையென்னும் அமுதத்தை உண்டவர் சுரர் என்றும், அதை உண்ணப்பெறாதவர் அசுரர் என்றும், பெயர்க் காரணம் காட்டப் பெறும். அசுரர்க்கு அவுணர், தானவர் என்ற பெயருமுண்டு , அசுரர் "aclass of demons at war with the gods" என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி கூறும். அசுரர் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவரும், மக்களினத் திலின்று வேறுபட்டவருமான ஒரு கொடிய வகுப்பினரென்றே புராணங்களும் இதிகாசங்களும் ஒருமிக்கக் கூறினும், ஆராய்ந்து பார்ப்பின், அவர் தமிழரின் அல்லது திராவிடரின் முன்னோரே யென்பதும், அத்துணைக் கொடியவ ரல்லர் என்பதும் வெளியாகும். அசுரர் வடநாட்டில் மட்டுமன்றித் தென்னாட்டிலும் இருந்திருக் கின்றனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பேரூர்ப் புராணமும் அங்கு முற்காலத்தில் ஓர் அசுரன் அல்லது அரக்கன் இருந்து ஆண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/168&oldid=1431659" இலிருந்து மீள்விக்கப்பட்டது