பக்கம்:தேவநேயம் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 தேவநேயம் அகரர் தாகவே கூறுகின்றது. தஞ்சையில் தஞ்சன் என்னும் அரக்கனும், திருச்சியில் திருசிரனென்னும் அரக்கனும் மன்றெச்சநல்லூரில் மண்ணரக்கன் என்பவனும் பிற நகரங்களில் பிற வரக்கரும், முதற்காலத்தில் ஆண்டனர் என்பது புராணக் கதை, அசுரரும் அரக்கரும் வெவ்வேறினத்தாராகப் பதினெண்கணப் பாட்டுகளிற் கூறப்பட்டிருப்பினும், இயலிலும் செயலிலும் ஒன்றுபட்ட வராகவே காட்டப்படுகின்றனர். மேலும் அவ்விரு வகுப்பார்க்கும் ஒருவரே (காசியப முனிவர்) தந்தையென்றும் புராணங் கூறுகிறது. தென்பெருங் கடலில் முழுகிப்போன ஒரு தீவையாண்ட சூரபதுமன் அசுரனாகவே சொல்லப்படுகின்றான், இங்ஙனம் தமிழகமெங்கும் தொன்முது காலத்திலிருந்த அரசரை யெல்லாம் அசுரரும், அரக்கருமாகக் கூறுவதே அயிர்ப்பிற்கு (suspicion) இடனாகின்றது. இனி செங்குட்டுவனிலும், பன்மடங்கு திறமையாக ஆண்ட சேர வேந்தனாகிய மாவலி என்னும் பச்சைத் தமிழனையும் அவன் மகன் வாணனையும், அசுரராகப் புராணங் கூறுவது, ஏனை முது பண்டைத் தென்னாட் டரசரும், தமிழரே என்றும் வாணன் என்னும் பெயரைப் பாணன் என்றும் திருத்தினர் பின்னோர் என்றும் உய்த்துணர வைக்கிறது. மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன் அடியிற் படியை அடக்கிய வந்தாள் நீரிற் பெய்த மூரி வார்சிலை மாவலி மருமான் சீர் கெழு திருமகள் சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு இந்திர திருவன் சென்றினி தேறலும் மணிமேகலை 19. 51 - 116) இப் பகுதியில் மாவலிக்கு "மூரி வார்சிலை" என்னும் அடை கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. சேரனுக்குச் சிறப்பாக உரிய சின்னம் வில், மூரி வார்சிலை - வலிமையுள்ள நீண்ட வில் "மூரி வெஞ்சிலை” என்றார் கம்பரும் (கம்பரா. கும். 26), மாவலியின் மகன் வாணன் அவன்வழியினர் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவலூரைச் சூழ்ந்த மகதையென்னும் நடுநாட்டை 14ஆம் நூற்றாண்டுவரை வாணகோவரையர் என்னும் பட்டப் பெயருடன், பெரும்பாலும் சேர வேந்தர்க் கடங்கிய சிற்றரசராயும், படைத்தலைவராயுமிருந்து ஆண்டு வந்ததாகத் தெரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/169&oldid=1431661" இலிருந்து மீள்விக்கப்பட்டது