பக்கம்:தேவநேயம் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அசுரர் பாவாணர் 153 வாணகோவரையரைப்பற்றி வி.நா. இராமச்சந்திர தீட்சிதர் கூறுவது:- மகாபலியின் வமிசவத்தர்களாக வழங்கப்பட்ட இவர்கள், சங்ககால முதலே பலம் பெற்ற சிற்றரசராயிருந்தவர்கள். அக்காலத்தில் சோணாடாண்ட கிள்ளிவளவனது பட்டத்துத் தேவி சீர்த்தி என்பவளை மாவலி மருமான் சீர்கெழு திருமகள்' என்று மணிமேகலை கூறுதலுங் காண்க. பிற்காலத்தில் இன்னோர் நடுநாடான மகதை மண்டலத்தின் தலைவர்களை ஆறகழூர் அல்லது ஆறை என்ற நகரிலிருந்து ஆட்சி செய்து, சோழ ஏகாதிபத்தியத்தின் பெருமையைத் தாங்கி வந்தார்கள். நம் சோழனது ஆட்சிக் காலத்தின் பெரும்பகுதியில் விளங்கிய வாண வரசன் "ஏகவாசகன் குலோத்துங்கசோழ வாணகோவரசன்' என்பவன். இவன் சாசனங்கள் சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை ஜில்லாக்களில் அமைந்துள்ளன. இவனன்றி இக்காலத்தில் மிகவும் பிரபலனாக விளங்கியவன், ஆறகளூருடைய மகதேசன் ராஜ ராஜ தேவன். பொன் பரப்பினான் வாணகோவரையன்" எனப்பட்டவன். திருவண்ணாமலைக் கோயிலிலும் பிறவிடங் களிலும் வரைந்துள்ள கல்வெட்டுகளில் இவ் வாணனைப் பற்றிய பாடல்கள் பல உள்ளன. அவை யாவும் சொற்செறிவும் பொருட் பொலிவும் பெற்று விளங்கும். அவற்றிலிருந்து பெருந் தமிழ்ப் புலவர்களின் புகழ்மாலை சூடியவன் இவன் என்பது தெரியலாம். இவனது வீரச்சிறப்பும் வெற்றிகளும் அறச்செயல் களும் அப் பாடல்களில் மிக அழகாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இவன் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலைப் பொன் வேய்ந்தவனாதலால் "பொன் பரப்பினான்” என்ற பெயர் இவனுக்கு வழங்கியது. (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் பக். 65, 66) மாவலி வழியினரைப் பற்றி வி. வெங்கையர் வரைவது. பாண வம்சத்து அரசர்கள் மகாபலியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் கல்வெட்டுகள் வடஆர்க்காடு ஜில்லா வேலூருக்கடுத்த திருவல்ல மென்கிற கிராமத்திலும், மைசூர் சமசுதானத்தில் குல்கான்பொடே என்கிற ஊரிலும் கிடைத்திருக்கின்றன. மூவுலகிலும் தொழப்பட்டவனாயும் தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் தலைவனாயுமிருக்கின்ற பரமேசுவரனுக்கு வாயில் காக்கும்படியாக நியமிக்கப்பட்டமகாபலிகுலத்தைச் சேர்ந்தவன், என்று சில பாண வரசர்கள் தங்களுக்குரிய கல்வெட்டுகளிற் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். பாண குலத்தைச் சேர்ந்த செப்புப் பட்டயங்கள் இரண்டுண்டு, அவற்றில் ஒன்று சிதம்பரம் கனக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/170&oldid=1431662" இலிருந்து மீள்விக்கப்பட்டது