பக்கம்:தேவநேயம் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 தேவநேயம் அகரா சபையின் முகட்டைப் பொன்வேய்ந்த பராந்தகன் என்று சொல்லப்பட்ட வீர நாராயணச் சோழன், பாண வம்சத்தை நின்மூலம் செய்து அவர் நாட்டைக் கங்க வம்சத்தைச் சேர்ந்த அத்திமல்லனென்ற அரசனுக்குக் கொடுத்ததாகச் சொல்லுகின்றது. இந்த வீரநாராயணன் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீவித்திருந்தான். மற்றொரு செப்புப் பட்டயத்தில் கீழே எழுதப் பட்டிருக்கும் வம்சாவளி கிடைத்தது. பலி; அவன் மகன் பாணன்; அவன் குலத்திற் பிறந்தவன் பாணாதிராசன். இவ் வம்சத்தைச் சேர்ந்த அநேக அரசர்கள் மரித்தபிறகு இருந்தோன் ஜயநந்தி வர்மன் (இவன் ஆந்திர தேசத்திற்கு மேற்கிலிருந்த நாட்டை ஆண்டவன்) அவன் மகன் முதலாம் விசயாதித்தன். அவன் மகன் ஜகதேகமல்லன் என்கிற மல்லதேவன். அவன் மகன் பாண வித்தியாதரன். அவன் மகன் பிரபுமேருதேவன். அவன் மகன் முதலாம் விக்கிரமாதித்தன். அவன் மகன் புகழ்விப்பவர் கண்டன் என்கிற இரண்டாம் விசயாதித்தன். அவன் மகன் விசயபாகு என்று கூறப்பட்ட இரண்டாம் விக்கிரமாதித்தன், (மணிமேகலை 1954 உ.வே.சா. அடிக்குறிப்பு) கீழ்வரும் பாடல்கள் 12ஆம் நூற்றாண்டிலிருந்த ஏகம்ப வாணன் புகழ்பற்றியன. பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம் மார்பகலங் கண்டு மகிழ்வோரே - போர்புரிய வல்லான் அகளங்க வாணன் திருநாமம் எல்லாம் எழுதலாம் என்று வாணன் பெயரெழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழுரையா வாயுண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ வுண்டோ அடிதாங்கி நில்லா அரசு. பாண்டியனைப் பேர்மாற்றிப் பாணர்க் கரசளித்த ஆண்டகையென் றுன்னை யறியேனோ - மூண்டெழுந்த கார்மாற்றுஞ் செங்கைக் கடகரிவா ணாவுனது போர்மாற் றுவதரிதோ பேசு என்கவிகை யென்சிவிகை யென்கவசம் என்துவசம் என்கரியீ தென்பரியீ தென்பவரே - மன்கவன மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசுபெற்ற பாவேந்த ரைவேந்தர் பார்த்து,' தேருருளைப் புரவி வாரணத் தொகுதி திறைகொ ணர்ந்து வரும் மன்னநின் தேச மேதுனது நாமமேது புகல் செங்கையாழ் தடவுடாணகேள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/171&oldid=1431663" இலிருந்து மீள்விக்கப்பட்டது