பக்கம்:தேவநேயம் 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அசுரர் பாவாணர் வாரும் ஒத்தகுடி நீரும் நாமுமக தேவன் ஆறைநகர் காவலன் வாணபூபதி மகிழ்ந்தளிக்க வெகு வரிசை பெற்றுவரு புலவன் யான் நீரும் இப்பரிசு பெற்று மீளவர லாகும் ஏகும் அவன் முன்றில்வாய் நித்திலச் சிவிகை மாட மாளிகை நெருங்கு கோபுர மருங்கெலாம் ஆரும் நிற்கும் உயர் வேம்பும் நிற்கும் வளர் பனையும் நிற்கும் அதன் அருகிலே அரசு நிற்கும் அரசைச் சுமந்த சில அத்தி நிற்கும் அடையாளமே.' சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி ஆனை மிதித்த அடிச்சேற்றில் - மானபரன் மாவேந்தர் வேந்தன் பறித்துநட்டான் ஏகம்பன் மூவேந்தர் தங்கள் முடி. இங்ஙனம் மாவலி மரபு வாண கோவரையர்வரை தொடர்ந்து வந்த தூய தமிழ்க் குடியாயிருக்க அவனையும் அவன் மகனையும் அசுரன் எனக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? இனி அசுரர் தமிழர் அல்லது திராவிடர் என்பதற்கு வேறுமொரு சான்றுண்டு, வடநூல்கள் கூறும் எண்வகை மணங்களுள் ஒன்றான ஆசுரம், மறச் செயல் புரிந்து மகட் கோடலாம். ஆசுர மாவது, கொல்லேறு கோடல், திரிபன்றி எய்தல், வில்லேற்றுதல், முதலியன செய்து கோடல் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 92 உரை) பண்டைத் தமிழகத்து முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்தபோதே ஒருசேங்கன்றிற்கு அவள் பெயர் குறித்து அதைக் கொல்லேறாக வளர்ப்பதும், அவள் பூப்படைந்த பின் அக் கொல்லேற்றை அடக்குபவனுக்கே அவளைக் கொடுப் பதும் வழக்கம். கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள். கலித். 103) கன்று, காலி வளர்த்து நெய், பால் விற்கும் இனச் செய்தி இஃதாயின் போரையே தொழிலாகக்கொண்ட பாலை மறவரும் மூவேந்தரும் எத்துணைத் தறுகணாளரும் துணிசெயலாளருமா யிருந்திருப்பார். இதனாலேயே செயற்கருஞ் செயலை அசுர நிருத்தியம் என்றும், அறுவை மருத்துவத்தை (Surgery) அசுர வைத்தியம் என்றும் வடநூல் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/172&oldid=1431664" இலிருந்து மீள்விக்கப்பட்டது