பக்கம்:தேவநேயம் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156 தேவநேயம் அகரா ஆரார் தலைவணங்கார் ஆரார்தாம் கையெடார். ஆரார்தாஞ் சத்திரத்தில் ஆறாதார் - சீராரும் தென்புலியூர் மேவும் சிவனருள் சேர் அம்பட்டத் தம்பிபுகான் வாசலிலே தான் என்னும் கம்பர் பாடல், பண்டைத்தமிழ் அறுவை மருத்துவ திற்குச் சான்று பகரும். பண்டைக் காலத்தில் மாபேருடல் வலிமையுள்ள மல்லரையும், மறவரையும், உறுவலி மதவலி மாவலி என்றழைப்பது வழக்கம். மாவலிமை யுடைமையாலேயே மாவலி அப்பெயர் பெற்றான். மூவுலகையும் அடக்கியாண்ட மாவலி என்று அவனை இகழ் வோரும் புகழ்வர். வரையாது வந்தீயும் வள்ளன்மையும் வருவ தற்கஞ்சா வாய்மையும் முறை செய்து காப்பாற்றும் இறைமையும் மாவலியின் அரும் பண்புகள். ஆரியத்திற்கு மாறாக விருந்ததினாலோ சிவநெறிக் கடும் பற்றினாலோ சூழ்ச்சியாக மாவலி மாய்க்கப்பட்டான். அதன் முடிவு அவன் கொடைத் திறத்தையும் சொல் தவறாமையையுமே குன்றின் மேலிட்ட விளக்காக எடுத்துக் காட்டுகின்றது. அவன் குடிகளால் அன்புகூரப்பட்ட செங்கோல் வேந்தனாயிருந்த தனால் அவன் மறைந்தது முதல் கடைக்கழகக் காலம்வரை தமிழகம் முழுவதும் ஆண்டிற்கொருமுறை ஓணநாளிற் கொண்டாடப் பெற்றான். இன்று அது அவன் பிறப்பு நாடாகிய மலையாள நாட்டில் மட்டும் நிகழ்ந்து வருகின்றது. மாங்குடி மருதனார் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்மேல் மதுரைக் காஞ்சி பாடியது, ஓர் ஓணத்திருநாள் என்று கூறப்பெறும், அச் செவியறிவு நூலை "ஓணத்திருநாளில் அவர் கூறியதற்கு அரிய கருத்து ஒன்றுண்டு, மூவுலகையும் அடக்கியாண்ட மாவலிச் சக்கரவர்த்தியை ஒடுக்க வேண்டி வாமனாவதாரத்தைக் கொண்டாடுவதே அத் திருவிழா என்பர். அம் மாவலி உத்தம குணச்செயல்கள் உடையவனாயினும், தன் ஆசுர வியல்பால் தேவர் முதலியவர்க்கு இடுக்கண் விளைவித்து வந்தவன். அதனால் கடவுளே அவதாரமூலம் அவன் செருக்கை ஒடுக்கநேர்ந்தது. எத்தனைப் பெருவலியும் செல்வங்களும் உடையவனாயினும் தெய்வ பலம், இல்லையேல் அவை யாவும் சிதைந்தொழியும் என்ற உண்மையைக் குறிப்பிடுவது அத் திருநாள் என்று கூறுவர் மு. இராகவையங்கார். இது ஆராய்ச்சி யுள்ள தமிழ்ப் புலவர் கருத்தன்று. சொல் தவறாமையினாலே மாவலி மாய்ந்தான் என்றும் தவறியிருப்பிற் தப்பியிருப்பான் என்றும் முடிவு கொள்வதற்கே குறள் தோற்றரவுக் (வாமனன்) கதை இடந்தருகின்றது. கொடையும் வாய்மையும் வழுவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/173&oldid=1431666" இலிருந்து மீள்விக்கப்பட்டது