பக்கம்:தேவநேயம் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அட்டலங்காய்... பாவாணர் 157 அறங்களேயன்றி வழுவாய் (பாவம்) ஆகா. அவற்றை ஊக்குவ தன்றித் தளர்விப்பது இறைவனுக்கு ஒத்ததன்று. மேலும் மாபலி கொடை வழங்கிய சமையம் வேள்வி என்று கூறப்படுவதால் அது தெய்வப் பற்றைக் காட்டுவதுடன் ஆரிய முறைப்படி சீரிய திருச்செயலுமாகின்றது. ஆதலால் தெய்வத்துக்கு மாறாக அவன் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை . தேவர் முதலியவர்க்கு இடுக் கண் விளைவித்தான் என்று வேகடையாய்க் கூறுவது பொருந் தாது. தேவர் யார்? அவருக்கு என்ன தீங்கு செய்தான்? மண்ணுலக வேந்தன் விண்ணுலகத் தேவருக்கு எங்ஙனம் தீங்கு செய்ய முடியும்? இன்னோரன்ன வினாக்கட்கு விடையின்மையால் அக் கூற்று பொருளற்றதெனக் கூறி விடுக்க. குடிகளை அன்பாய் அரவணைத்துக் காப்பதே அரசன் கடமை. ஆண்டிற்கொரு முறை ஓணநாளில் மாவலி தன் குடிகளைக் கண்டு போக இறைவ னிடம் ஈவு (வரம்) பெற்றான் என்றும், மலையாளியர் அவனைக் கண்டு களிப்பதுபோல் கொண்டாடுகின்றனர் என்றும் கூறப்படு வது மாவலியின் மாபெருந் தகைமையைக் காட்டுமன்றோ! இதுகாறும் கூறியவற்றால் அசுரர் தமிழரின் முன்னவரே யென்றும், தீயவரல்லரென்றும், பாகதத்திற் கொள்வது போல், சுரையென்னும் கள்ளை யுண்டவர் சுரர் என்றும் அதை உண்ணாத சான்றோரை அசுரர் என்றும் கூறுவதே பொருத்த மென்றும் தெரிந்து கொள்க. அசை-அச் நஞ்சினை யசைவு செய்தவன் (தேவா. 581: 3) அசைத்தல் = உண்ணுதல். அசைவு செய்தல் = உண்ணுதல். அசை என்னும் முதனிலை வழக்கிறந்தது. ஒ.நோ, கட்டல் (கள்+தல்) என்னும் வினை வழக்கற்றபின் களவுசெய் என்பது முதனிலையாய் வழங்குதல் காண்க, அட்டம்' - அட்டம் (boiled rice) அடு - அடுசில் - அடிசில், அடு - அட்டம். அடுதல் = சமைத்தல், (வ.வ. 67). அட்ட ம் - அட்ட (High, lofty) எட்டு - எட்டம் = உயரம். எட்டம் - அட்டம். அட்டம் - அட்டஸ்(வ) = மதில்மேற் காவற்கூடம். (வ.வ. 68). 'அட்டலங்காய் புட்டலங்காய்' விளையாட்டு செவிலித்தாய் அல்லது மூதாய் (பாட்டி பல குழந்தைகளை வரிசையாகக் கால்நீட்டி உட்காரவைத்து, அவர்கள் கால்களை இட வலமாகவும் வல இடமாகவும் தடவிக்கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/174&oldid=1431667" இலிருந்து மீள்விக்கப்பட்டது