பக்கம்:தேவநேயம் 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தேவநேயம்

அட்டாவை


அட்டலங்காய் புட்டலங்காய் அடுக்கடுக்காய் மாதுளங்காய்
பச்சரிசி குத்திப் பரண்மேலே வைத்திருக்கு
தேங்காய் உடைத்துத் திண்ணைமேலே வைத்திருக்கு
மாங்காய் உடைத்து மடிமேலே வைத்திருக்கு
உப்புக் கண்டஞ் சுட்டு உறிமேலே வைத்திருக்கு
எந்தப் பூனை தின்றது - இந்தப் பூனை தின்றது

என்று பாடி “இந்தப் பூனை” என்று சொல்லும் போது ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டுவாள்.
பூனை உறியிலுள்ள உப்புக் கண்டத்தைத் தின்று விட்டதைக்

குறிப்பதாக உள்ளது இவ்விளையாட்டு.

அட்டாலை - அட்டால

அட்டம்+ஆலை = அட்டாலை = மதின்மேற் காவற்கூடம் அல்லது கோபுரம். சாலை - ஆலை.

கீழ்பா லிஞ்சி யணைய வட்டாலை கட்டு (திருவாலவா. 20:10)
அட்டாணி - அட்டாலை
தலையெடுப்பாக வுயர்ந்த அட்டாணியும் (இராமநா. சுந். 3)

ஆரியர் வருமுன்பே, பல்வகை யரணுறுப்புக்களைக் கொண்ட கோட்டை கொத்தளங்கள் தமிழகத்திலிருந்தன.

அட்டாலை - அட்டாளை (யா,)

அட்டில் வகை

அடுக்களை வீட்டில் அடுப்புள்ள இடம்; சமையலறை சமைப்பதற்கென்று தனியாயுள்ள அறை; அட்டில் சமையலுக்குத் தனியாயுள்ள சிறு வீடு; ஆக்குப்புரை விழாப் பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும் இடம்; மடைப்பள்ளி கோயிலை அல்லது மடத்தைச் சேர்ந்த சமையல் வீடு, (சொல், 50),

அடக்கம் - டக்கா (dh)

அடக்கம் = அடங்கிய ஓசையுடைய தோற்கருவி
“நிசாளந் துடுமை சிறுபறை யடக்கம்” (சிலப். 3: 27 உரை) (வ.வ. 58).

அடவி - அடவீ(t)

அடு-அடர்-(அடர்வி)-அடவி = மரமடர்ந்த சோலை அல்லது காடு. இனி, அடு-அடவி என்றுமாம். அடுத்தல் = நெருங்குதல், சேர்தல், அடர்தல்.

வடமொழியாளர் காட்டும் சொற்பொருட் கரணியம் வருமாறு.

அட்= திரி (to roam), அலை(to wander about), அடவீ= திரியுமிடம் (place to roam m), மரமடர்காடு (forest). (வ.வ.68).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/175&oldid=1491457" இலிருந்து மீள்விக்கப்பட்டது