பக்கம்:தேவநேயம் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டின உயிரைக் காத்தல்

பாவாணர்

159


அடியளந்தான்

கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப் போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால் அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது. வேத ஆரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால் திருமால் மூவடியால் உலக முழுவதையும் அளந்தான் என்றொரு கதை யெழுந்தது. இதுவே குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். கதிரவன் நாள்தோறும் அளந்தாலும் முன்னை நிகழ்ச்சி பற்றி 'அடியளந்தான்' இறந்தகால வினையாலணையும் பெயரால் குறிக்கப்பெற்றது. உழிஞைக் கொடி முடக் கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. (குறள்610)

அடிவகை

தாள்: நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு: கீரை, வாழை முதலியவற்றின் அடி
கோல்: நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி
தூறு: குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
தட்டு அல்லது தட்டை: கம்பு சோளம் முதலியவற்றின் அடி
கழி: கரும்பின் அடி கழை: மூங்கிலின் அடி.
அடி: புளி, வேம்பு முதலியவற்றின் அடி (சொல், 65).

அடு-அச் (இ.வே.)

அடுத்தல் = நெருங்குதல்,அடைதல்.

அண்டின உயிரைக் காத்தல்

அடைக்கலங்காத்தல் உயர்ந்தோர்க்குச் சிறந்த அறமாகும். பழந்தமிழரும் ஆப்பிரிக்க மூர் வகுப்பினரும் இவ்வறத்தைக் கடைப்பிடித்து வந்தனர்.

இடைந்தவர்க் கடயம் யாமென் றிரந்தவர்க் கெறி நீர் வேலை
கடைந்தவர்க் காகி ஆலம் உண்டவர்க் கண்டி லீரோ
உடைந்தவர்க் குதவா னாயின் உள்ளதொன் றீயா னாயின்
அடைந்தவர்க் கருளா னாயின் அறமென்னாம் ஆண்மை என்னாம்

(கம். விபீ. அடை.111)

என்று கம்பர் கூறுவது தமிழர் அறமே.
அடைந்தவர் மக்களாயின், அவர் தம்மால் அடையப் பட்ட வரிடம் அடைக்கலம் வேண்டிப் பெறுவர். ஆனால், வாயில்லா அஃறிணை யுயிரிகள் எங்ஙனம் பேசும்? எங்ஙனம் வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/176&oldid=1485052" இலிருந்து மீள்விக்கப்பட்டது