பக்கம்:தேவநேயம் 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

160 தேவநேயம் அணி இவ்வெளிய நிலையுணர்ந்தே, இல்லங்களையடுத்து வாழும் சிற்றுயிரிகள் கொல்லும் ஆற்றல் வாய்ந்தனவாயினும், மக்கள் அவற்றைக் கொல்வதில்லை. நல்ல பாம்பு போன்றே அரணையும் நச்சு நீர் உடையது. 'அரணை தீண்டினால் மரணம்' என்பது பழமொழி. ஆயினும், மக்கள் அதைக் கொல்வதில்லை; அதுவும் ஒன்றும் செய்வதில்லை. வீட்டையடுத்துவாழும் நல்லபாம்பும், பேணி வளர்க்கப்படின், அல்லது பாதுகாக்கப்படின், தீங்கு செய்யாதிருத்தலும், பலவிடத் தும், சிறப்பாக மலையாள நாட்டில் காண்கிறோம். வீட்டு முகட்டிலும் கூரையிறப்பிலும் கூடுகட்டி வாழ்வது அடைக்கலான் குருவி, "பிறப்பிறப்பிலே” என்றார்காளமேகரும், சிறுவரும் எளிதாய்ப் பிடித்துத் தீங்கிழைக்கும் வண்ணம், இக் குருவிகள் தாமாக வந்து இல்லங்களிற் கூடுகட்டி வாழும். பெரியோர் இவற்றைக் காவாவிட்டால் இவற்றிற்கு வாழ்க்கை யில்லை. இதை யுணர்ந்த பெரியோர் இவற்றிக்கு அடைக்கலான் எனப் பெயரிட்டனர். இவை இல்வாணரை அடைக்கலமடுத்த தென்பதும், இவற்றைக் காத்தல் அவர் கடமை என்பதும், இச் சொல்லாற் குறிக்கப்படும் கருத்தாகும் (சொல். 108), அணி கருத்தின் அழகே அணி; அது செய்யுளைப் போலவே உரை நடைக்கும் உரியது (சொல், 1), அணி அமைவு ஒரு கருத்தைத் தெரிவிக்க ஒரு சொற்றொடரே வேண்டும் என்னும் யாப்புறவில்லை. ஒரு சொல்லாலும் ஒரு கருத்தைத் தெரிவிக்கலாம். ஆகவே தனிச் சொற்களிலும் அணி அமைதற்கு இடனுண்டு (சொல் 2). அணியின் நோக்கு பொருளை விளக்குவதும் அழகுபடுத்துவதுமே அணியின் நோக்கு (சொல். 1). அணிற்பிள்ளை (விளையாட்டு) ஆட்டின் பெயர்: ஒருவன், பெருஞ்சதுரத்தின் நடுவிலுள்ள குறுக்கை (சிலுவை) போன்ற கோட்டின்மேல் நின்றுகொண்டு, அணில்போல் முன்னும் பின்னும் இயங்கி யாடும் ஆட்டு அணிற் பிள்ளை எனப்படும். ஆடுவோர் தொகை: இதை ஐவர் ஆடுவர். அரங்கு அணிய பின்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/177&oldid=1431671" இலிருந்து மீள்விக்கப்பட்டது