பக்கம்:தேவநேயம் 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த -ஹந்த

பாவாணர்

161


 ஆடு கருவி; நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரமும் நாற்கல்லும் இதை ஆடு கருவிகளாம்.

ஆடிடம்: பொட்டலும், அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம்

ஆடுமுறை: நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரத்தின் ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொருவனாக, நால்வர் நின்று கொள்வர், பெருஞ் சதுரத்தின் நடுவில் நாற்கல் வைக்கப்படும். ஒருவன் நடுவிலுள்ள குறுக்கை போன்ற கோட்டில் குறுக்கும் மறுக்கும் முன்னும் பின்னுமாக முன்னோக்கியே இயங்கிக் கொண்டு, அந்நால்வரும் அக்கற்களை யெடாதவாறு தடுப்பன். அவர் அவனால் தொடப்படாமல் ஆளுக்கொரு கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவனே நாற்கல்லையும் எடுத்து ஆளுக்கொன்றாகக் கையில் கொடுக்கவுஞ் செய்யலாம். ஒவ்வொருனும் ஒவ்வொன்றாக எடுக்கும்போதேனும், ஒருவனே நான்கையும் எடுத்துக் கொடுக்கும்போதேனும், அணிற்பிள்ளை தொட முயல்வான்; தொட்டுவிடின், தொடப்பட்டவன் அணிற்பிள்ளையாதல் வேண்டும். இங்ஙனமே தொடரும்.

அத்தம் - அத்வன்(ch)
அற்றம் - அத்தம் = ஆளில்லாத காடு, அருநெறி.

ஆளி லத்த மாகிய காடே (புறம் 23)

அத்தவனக் காடு என்பது உலக வழக்கு.

ஆள்வழக்கற்ற காட்டுவழி என்னும் சிறப்புப் பொருளை இழந்து வழி என்னும் பொதுப் பொருளையே அத்வன் என்னும் வடசொல் உணர்த்துகின்றது (அ.வே.) (வ.வ.68.)

அந்த - ஹந்த (இ.வே)
அத்தன் (தந்தை) - அத்தோ ! - அந்தோ ! - அந்த
அந்த! - அந்தவோ! - அந்தகோ!

சிறு பிள்ளைகள் ஏதேனுமொன்று கண்டு வியக்கும் அல்லது அஞ்சும் அல்லது இரங்கும் அல்லது வருந்தும் நிலையில், தம் பெற்றோரை (சிறுவர் தந்தையையும் சிறுமியர் தாயையும்) விளிப்பது இயல்பாதலால், பெற்றோர் பெயரின் விளிவடிவுகள் மேற்குறித்த உணர்ச்சிகளை வெளியிடும் குறிப்பிடைச் சொற்களாயின.

ஒ.நோ.அச்சன்-அச்சோ; ஐயன்-ஐய-ஐயவோ-ஐயகோ,ஐயோ. (வ.வ. 70)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/178&oldid=1485158" இலிருந்து மீள்விக்கப்பட்டது