பக்கம்:தேவநேயம் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

162 தேவநேயம் அத்தன் அத்தி அத்தன் அத்தி அத்தன் அத்தி என்பன முறையே தந்தையையும் தாயையும் குறிக்கும் தென் சொல், அவை அச்சன், அச்சி என்று திரியும். தகரம் சகரமாகத் தமிழில் திரிவது இயல்பு. அப்பன் அம்மை என்பன கண்ணப்பன், கண்ணம்மை என்பவற்றில் வருவது போல், அத்தன், அத்தி, அச்சன், அச்சி என்னும் தந்தை, தாய்ப் பெயரும் ஆண்பால் பெண்பால் ஈறாய் வரும். வண்ணாத்தி, தட்டாத்தி என்பவற்றில் 'அத்தி' என்பதும் மருத்துவச்சி, வேட்டுவச்சி என்பவற்றில் 'அச்சி' என்பதும் பெண்பால் ஈறுகளாம். (எ.கா.) நத்து - நச்சு. அதி - அதி (ati, adhi) அதித்தல் = வீங்குதல், பருத்தல், மிகுதல். மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை. (குறள். 636). அதி + இகம் = அதிகம். அதி + அனம் = அதனம் = மிகுதி. அதிகன் = 1, மிக்கோன். பகைஞர்க் கெல்லா மதிகனாய் பிரபோத 26: 110). 2. பரம்பொருள், இறைவன். அதிகன் வேணியி லார்தரு கங்கையை (கந்தபு. திருக்கயி - 200. அதிகர் = பெரியோர். அதிகருக் கமுதமேந்தல் (சூடா. 11 : 99). அதி + அகம் = அதகம் - அதகன் = வலிமையோன். உறுதுயர் தீர்த்த வதகன் (திவ். பெரியாழ். 2: 1: 9). அதி - அதை, அதைத்தல் = வீங்குதல், செருக்குதல். அதி என்னும் வினை பிற்காலத்தில் வழக்கற்றது. அதி என்பது வடமொழியில் முன்னொட்டாகிய இடைச்சொல் லேயன்றி வினைச்சொல்லன்று. அது இருவடிவில் காட்டப்படினும் ஒரு சொல்லே . (வ.வ: 69); (தி.ம. 735.) அதிகாரம் - அதிகார அதி என்னுஞ் சொல் முற்கூறியதே. கடுத்தல் = மிகுதல், கடு - கடி - கரி, கரித்தல் = மிகுதல், உப்புக் கரித்தல் என்னும் வழக்கை நோக்குக. கரி - காரம் = மிகுதி, கடுமை, வலிமை கடுஞ்சுவையான உறைப்பு. அதிகரித்தல் (மீமிசைச்சொல்) = மிகுதல், பேரளவாதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/179&oldid=1431674" இலிருந்து மீள்விக்கப்பட்டது