பக்கம்:தேவநேயம் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதிகாரிகளின் அமாத்தம் பாவாணர் 163 அதிகரி - அதிகாரம் = ஆட்சிவலிமை, நூலின் பெரும்பகுதி. அதிகாரி = அதிகாரமுள்ளோன். வடமொழியில் அதிக்ரு என்னும் கூட்டுச்சொல்லை மூலமாகக் காட்டி, அதற்குத் தலைமையாயிருத்தல் என்று பொருளுரைப்பர். க்ரு செய்) என்னும் சொற் சேர்க்கையால் அப்பொருள் பெறப்படாமை காண்க. (வ.வ.) மேலும், அதிகாரம் என்னும் சொல் வடமொழியில் நூற் சிறு பிரிவைக் குறிப்பதாக மானியர் வில்லியம்சு குறிப்பர். தமிழில் தொல்காப்பியத்திற்போல் நூற்பெரும் பிரிவைக் குறிப்பதே மரபு, திருக்குறளில் பதிகம் என்னும் பெயருக் கீடாக அதிகாரம் என்னும் சொல்லைப் புகுத்தியது உரையாசிரியர் தவறு போலும்! (வ.வ70) அதிகாரிகளின் அமர்த்தம் (முன்னாளில்) ஊர்களிலிருந்த ஆளுங்கணத்தார் ஆங்காங்குள்ள மக்களால் அரசாணை விதிப்படி தேர்ந்தெடுக்கப் பெற்றனர். பிற அரசியல் வினைஞரெல்லாம், பெரும்பாலும் அரசனாலும் அவ்வம் மேலதிகாரிகளாலும் அமர்த்தப்பட்டனர். ஓர் இளவரசன் அல்லது வேற்றரசன் அரியணையேறு முன்னரே, அவன் முன்னோரால் அல்லது அவனுக்கு முந்தினோரால் அமர்த்தப்பெற்று ஏற்கெனவே தத்தம் வினையைச் செவ்வை யாய்ச் செய்துவரும் அரசியல் வினைஞரை. குற்றஞ் செய்தா லொழியப் புதிய அரசன் நீக்குவதில்லை . ஒரு வினைஞன், பொறுக்கலாகாக் குற்றஞ் செய்த விடத்தும், தீராத நோய்ப்பட்ட விடத்தும், வினையாற்ற இயலா மூப்பெய்தியவிடத்தும், இறந்த விடத்தும், அவனுக்குப் பதிலாக ஒருவன் ஆளும் அரசனால் அல்லது மேலதிகாரியால் அமர்த்தப் பெறுவான். தகுதி வாய்ந்திருப்பின் இயன்ற விடத்தெல்லாம், தந்தை மகன் ஆகிய வழிமுறைப்படியே வேலைகள் வழங்கப்பட்டு வந்தன. சிறந்த தகுதி வாய்ந்திருப்பின், கீழ்ப் பதவியாளர் மேற்பதவிக் குயர்த்தப்படுவர். ஒவ்வொரு வினைஞனும் தகுதிபற்றியே அமர்த்தப்பட்டா னெனினும், தலைமையமைச்சன் தகுதியையே அரசன் முக்கியமாய்க் கவனித்தான். | அறநிலை திரியா அன்பின் அவையத்துத் திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தே னாகுக (புறம் 711 நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக் கொடிதோர்த்த மன்னவன் (கலி. 8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/180&oldid=1431675" இலிருந்து மீள்விக்கப்பட்டது