பக்கம்:தேவநேயம் 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவணர் - உருவாக்கம்

பாவணர்

3


பொந்திகை11 யாக உண்டு சடுத்தமாக12 வருவாருடனே பாவாணரும்‌ அன்றோ பொந்திகையாக வருகின்றார்‌.
பிறப்பியம்‌13 எழுதி ஐந்திறம்‌14 அறிவாரிடத்தும்‌, தொன்மம்15 படித்துத்‌ தோற்றரவை16 நம்புவாரிடத்தும்‌ கூடத்‌ தமிழால்‌ ஒன்றியுள்ளார்‌ பாவாணர்‌.
அறிவன்‌17 காரி18 பார்த்து நீராடுவாரிடத்தும்‌ செந்தணப்பில்‌19 வீற்றிருப்பாரிடத்தும்‌ பாவாணர்‌ உறைகின்றார்‌.
தூவல்‌20 கொண்டு எழுதுவாரிடத்தும்‌ பாடகராகிய21 பாடுவாரிடத்தும்‌ பாவாணர்‌ ஒன்றியுள்ளார்‌.
குமுகாய22 மேம்பாட்டுக்கு எடுப்பை? அகற்றி அடிப்பைப்‌24 பயன்படுத்த வேண்டும் என்று சூளிட்டுக்‌ கொள்வாரிடத்தே பாவாணர்‌ சுடர்விடுகின்றார்‌.
அரத்தம்‌25 படைச்சால்‌26 வைத்தூற்றி27 மணிப்பவழம்‌28 இன்னவற்றை அகரமுதலியில்‌ இணைப்பாரிடத்தே பாவாணர்‌ இணைந்‌திருக்கிறார்‌.
அழகனார்‌29 அழகமதியர்‌30 அருட்செல்வர்‌31, ஆமலையழகர்‌32, மதியழகர்‌33, மணவழகர்‌34 அருளர்‌35, மனங்கவர்ந்தார்‌36 சின்னாண்‌டார்‌37, மகிழ்நர்‌38-இன்ன பெயராளர்களிடத்தில்‌ பேராளராகப்‌ பாவாணர்‌ திருக்கோலம்‌ கொண்டுள்ளார்‌.
வெங்காலூர்‌39 வேம்பாய்40, எருதந்துறை41 பைந்திரம்‌42 அமைதிவாரி43 என்று எண்ணுவாரிடத்தும்‌ வேம்பா(கொதிகலத்‌) தொழிற்சாலை44 தடிவழிவிரைவான்‌45 நாட்சரி46, மாதிகை47 என்று பெயரிடுவாரிடத்தும்‌ பாவாணர்‌ அமைந்திருக்கிறார்‌.
காட்டு விலங்காண்டி48 என்றாலும்‌ பட்டந்தாங்கி49 என்றாலும்‌ நேரி50யைப்‌ பயன்படுத்தும்‌ அளவில்‌ மொழியாக்க நோக்குக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌ என்று கருதின்‌ அவரிடத்தே பாவாணர்‌ அகமலர்ந்து முகமலர்ந்து அழகுக்‌ காட்சி வழங்குகிறார்‌.
இங்குச்‌ சுட்டிக்‌ காட்டிய ஐம்பது சொற்கள்தாமோ, தேவநேயம்‌. இப்படி எத்துணை எத்துணை ஐம்பதுகள்! அவற்றையெல்லாம்‌ ஒருங்கே தொகுத்துக்‌ காட்டும்‌ வேர்‌ விளக்கம்‌-பொருள்‌ விளக்கம்‌-எடுத்துக்‌காட்டு விளக்கம்‌ இன்னவையெல்லாம்‌ ஒருங்கே ஒரு தொகுப்பாகத்‌ தொகுத்துக்‌ காட்டும்‌ சொற்களஞ்சியமே (சொற்பொருள்‌ விளக்கக்‌ களஞ்சியமே) தேவநேயமாகத்‌ திகழுமாக.அதற்கு அரசும்‌ அமைப்புகளும்‌ ஆர்வலர்களும்‌ முந்து நின்று பணி செய்வார்களாக என்பது எம்‌ வேண்டுகையாக இருந்தது.

(1.டாக்டர்‌, 2.மருத்துவர்‌, 3.காபி, 4.தேநீர்‌, 5.தயார்‌, 6.வசதி, 7.ஸ்டூல்‌, 8.மேசை, 9.புரூட்‌ சாலிட்‌, 10.ஐஸ்கிரீம்‌, 11.திருப்தி,12.விரைவு, 13.சாதகம்‌, 14.பஞ்சாங்கம்‌, 15.புராணம்‌, 16.அவதாரம்‌, 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/20&oldid=1479791" இலிருந்து மீள்விக்கப்பட்டது