பக்கம்:தேவநேயம் 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தேவநேயம்

தேவநேயம்


புதன், 18.சனி, 19.ஏர்கண்டிசன், 20.பேனா, 21.பாகவதர், 22.சமுதாயம், 23.எடுப்புமலக்கூடம், 24.பிளஸ்அவுட், 25.இரத்தம், 26.பர்லாங், 27.புனல், 28.மணிப்பிரவாளம், 29.சுந்தரம், 30.இராமச்சந்திரன், 31.கருணாநிதி, 32.பசுமலை சுந்தரம், 33.சோமசுந்தரம், 34.கலியாணசுந்தரம், 35.கருணை, 36.மனோகரன், 37.சின்னசாமி, 38.சந்தோசம், 39.பெங்களூர், 40.மும்பை, 41.ஆக்சுபோர்டு, 42.கிரீன்லாண்ட், 43.பசிபிக் கடல், 44.பாய்லர் தொழிற்சாலை, 45.கிரேண்ட் டிரங்கு எக்சுபிரசு, 46.தினசரி, 47.மாத இதழ், 48.மிருகாண்டி(மிராண்டி), 49.பட்டதாரி, 50. ஓட்டு)
பாவாணர் துறைக்கு விடுத்த இந்த அறிக்கை, எம்மறுமொழியும் இன்றிக் கிடப்பில் போடப்பட்டமையாலும், அவர்கள்தம் நோக்கில் அகரமுதலியை முடிக்கத் திட்டமிட்டதாலும்,"அரசையோ, துறையையோ நம்புவதில் பயனில்லை" என்னும் பட்டறிவு உண்டாயிற்று.
பாவாணர் நூல்களையெல்லாம் வாரமுறையில் ஐம்பான் ஆண்டுகளாக வெளியிட்டு வந்த தெ.இ.சை.சி. கழகமோ, மணிவாசகர் பதிப்பகமோ நாம் இப்பணியை முடித்துக் கொடுத்தால், வெளியிடும் என்னும் உறுதியால் பணியைத் தொடங்கினேம். இடையே தவச்சாலை நிறுவி நூல்வெளியீடும் மேற்கொண்டமையால், அதன்வழி வெளியிடலும் வாய்க்கும் எனக் கிளர்ந்தேம். அந்நிலையில் கருவூர் அருள் நிறை சாரதா அன்னை அறிவியல் கலைக்கல்லூரி நிறுவனரும், தமிழன்னைக்கும் வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் கம்பருக்கும் பொற்சிலை எடுத்துப் போற்றுபவரும், திருக்குறள் திருவாசகம் தாயுமானம் முற்றோதலுற்றவருமாகிய தவத்திரு ஆருயிர்க்கின்ப அடிகளார் (தவத்திரு ஆத்மானந்தர்) அத்தொகுப்புப் பணி, வெளியீட்டுப் பணி என்பவற்றைத் தாம் ஏற்றுக் கொள்வதாக நெஞ்சார்ந்த நேயவுரை வழங்கினர்; தொகுத்து விரைவில் முடிக்குமாறும் தூண்டினர்; இயல்பாகவே ஊன்றியிருந்த யாம், இனிய தோன்றலின் தூண்டலால், மேலும் ஈடுபட்டு ஆழ்ந்தேம்.
இந்நிலையில், பாவாணர் நூற்றாண்டு விழா எய்தியது. முன்வரவாக 2001ஆம் ஆண்டு தொட்டே 'பாவாணர் தமிழியக்கத் திங்கள் பொழிவுகள் நிகழ்ந்தன. அரசும் பாவாணர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கல், நூற்றாண்டு விழா எடுத்தல் என்பவற்றை மேற்கொண்டது. பள்ளிகள், அமைப்புகள் பல்கலைக்கழகங்கள் எனப் பாவாணர் புகழ் நாடளாவிய அளவில் நிகழ்ந்தது. தமிழாக்கம் கருதி நிறுவப்பட்ட 'தமிழ்மண் பதிப்பகம்' ஒரு மாப்பெருந் திட்டம் மேற்கொண்டது. பாவாணர் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்ட ஏந்தால், அவர்தம் எழுத்துகள் அனைத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/21&oldid=1479792" இலிருந்து மீள்விக்கப்பட்டது