பக்கம்:தேவநேயம் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தேவநேயம் அரிக்குரல் = நுண்ணியதாய் ஒலிக்கும் குரல். அரித்தல் = சிறிது சிறிதாய்ச் சேர்த்தல். அரிக்கன் = அரிக்கும் சட்டி அரிப்பு வலை = அரிக்கும் மீன்வலை. அரி = பருப்பினும் சிறிய கூல உள்ளீடு. அரி = அரிசி. அரிசிக்களா = சிறுகளா. அரிசிப்பல் = சிறுபல். அர் - அரு - அருவு. அருவுதல் = 1. மெல்லெனச் செல்லுதல், 2. அறுத்தொழுகுதல். கரையை ஆற்றுவெள்ளம் அருவுகிறது (உவ) 3. துன்பப்படுத்துதல். அருவி நோய் செய்து (திவ். பெரியதி. (9,7,6). அருவு - அருவி = மலையுச்சியினின்று மரஞ்செடி கல் மண்ணை அரித்தொழுகும் நீர் வீழ்ச்சி. அருவு - அருகு. அருகுதல் = 1. குறைதல். ஒன்னார் மதிநிலை அருக (இரகு. யாக. 34). 2.அரிதாதல். அர் அருகுவித் தொருவரை யகற்றலின் (கலித். 242) 3. அஞ்சுதல். அஞ்செஞ்சாய லருகாதணுகும் (சிலப். 30:120) 4.கெடுதல். பருகுவன்ன அருகா நோக்கமொடு பொருந. 77) அரு + அருமை = 1. பொருள்முடை 2.எளிதிற்பெற அல்லது காண முடியாமை. 3. அளவிறந்த பற்று அல்லது மதிப்பு மிகை. 4.பெருஞ்சிறப்பு. அருமருந்தன்ன - அருமந்தன்ன - அருமந்த - அருமாந்த. அருமைக்காரன் = கொங்குவேளாளர் பூசாரி. அருகு - அருக்கு - அருமை. நீதியின் அருக்கு முன்னி (திருக்கோவை, 275)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/211&oldid=1431712" இலிருந்து மீள்விக்கப்பட்டது