பக்கம்:தேவநேயம் 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர் பாவாணர் அருக்குதல் = அருமை பண்ணுதல். அருக்காணி = அருமை. அஞ்சு பேருக்கு அருக்காணித் தங்கை (உவ) அரு - அருந்தல் = விலையுயர்வு, பொருளருமை. அருந்தற்படி - Deamess Allowance அர - அரை, அரைத்தல் = 1. தேய்த்தல். 2. தேய்த்துத் தூள் அல்லது களியாக்கல். அரை - அரைவை. அரு - அரை = அருகிய அல்லது சிறுத்த இடை; உடம்பிற் பாதி, பாதி. ஒநோ இடு- இடுகு. இடுத்தல் = சிறுத்தல். இடு - இடுப்பு. இடு - இடை = இடுப்பு,நடு. அர் - அறு - அறை = அரங்கு. அறைக்கீரை = அறையறையாய் வகுக்கப்பெற்ற பாத்தியில் விளையும் கீரை. "அறைக்கீரை நல்வித்தும்" (திருமந். 100) அறை = அறுத்தது, அற்றது, எ-டு: உறுப்பறை, கண்ணறை, மூக்கறை (யன்). அறை = அறுத்தது, வரம்பிட்டது. எ-டு: வரையறை. அறு - அறுதி. அறு - அறவு = நீக்கம். எ-டு: வரையறவு. அறு - அற்றம் = ஆடை நீங்குகை, விழிப்பில்லா நிலை. அறு அறுவு = தீர்ந்து போதல், "அரிசி அறுவாய்ப் போய்விட்டது" (உவ) 195 அறு - அறுவு அறுவடை அறு - அறுப்பு = 1. கதிரறுப்பு. 2. கைம்பெண் தாலியறுப்பு. அறுதாலி = கைம்பெண் (தாலியற்றவள்) அறு - அறுவை = 1. அறுக்கப்பட்ட ஆடை, சவளி, 2. அறுப்பு மருத்துவம் (இக்காலப் பொருள்) அறு - அறுகு = 1. அகலப் படர்ந்து ஆழ வேரூன்றிப் பயிரை அழிக்கும் புல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/212&oldid=1431714" இலிருந்து மீள்விக்கப்பட்டது