பக்கம்:தேவநேயம் 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தேவநேயம் 2.பிறவுயிரினங்களை அழிக்கும் அரிமா. அறுகு = அறுகை (அறுகம்புல்). அறுகிடல் = அறுகம்புல்லைத் தூவி அதுபோல் வேரூன்றிப் படருமாறு மணமக்களை வாழ்த்தல். அறு - ஆறு = 1. நிலத்தூடறுத் தொழுகும் நீரோட்டம். 2.வழி அறுவாள் வகைகள் நில முழுதும் சோலையாயிருந்த பண்டைக்காலத்தில் ஆறுகளே வழிகளாயிருந்தன. 3.சமயதெறி. 4. ஆறென்னும் எண். அறுவாள் வகைகள் முதற்காலத்திலேயே தெய்வ வழிபாடுகள் அல்லது மதக் கொள்கைகள் அறுவகைப்பட்டிருந்ததனால்,ஆறென்னும் நீர் நிலைப்பெயருக்கு ஆறென்னும் எண்ணுப் பொருளும் தோன்றிற்று. மதம் என்னும் சொற்கு ஆறென்னும் பொருள் இருப்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது. ஆறிருக்கும் ஊர் சில ஆற்றூர் எனப்படும். அப்பெயர் ஆறையென மருவும். எ-டு: பழையாறை. அறு - அறுவாள். அரிவாள் வேறு, அறுவாள் வேறு. காய்கறியறுக்கும் மணைவாளே அரிவாள் எனப்படும். பிற அறுப்பு வாளெல்லாம் அறுவாள் என்றே கூறப்பெறும். மெலிதாய் அறுப்பது அரிவாள் என்றும், வலிதாய் அறுப்பது அறுவாள் என்றும், வேறுபாடறிதல் வேண்டும். தொழிலின் அல்லது வினையி குறிக்க இடையின ரகரமும் வன்மையைக் குறிக்க வல்லின றகரமும் ஆளப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. (i) பன்னறுவாள் (Sickle) பல் - பன். பன் வைத்தது பன்னறுவாள். (2) பாளையறுவாள். தென்னை பனை முதலியவற்றின் பாளையைச் சீவுவது பாளையறுவாள். (3) வெட்டறுவாள். கடா கிளை முதலியவற்றை வெட்டுவது வெட்டறுவாள். (4) கொத்தறுவாள். இஃது ஆட்டுக்கறியை அறுப்பதற்கும் கொத்துவதற்கும் பயன்படுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/213&oldid=1431715" இலிருந்து மீள்விக்கப்பட்டது