பக்கம்:தேவநேயம் 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசர் இல்லற வாழ்க்கை பாவாணர் 205 என்னும் உண்மை, இச்சொல்லால் விளங்கும். ஓர் அரசனுடைய குடிகளை அவன் அடி நிழலார் என்று கூறுவதும் இக்கருத்துப் பற்றியே. மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஐந்துந் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ என்றார் சேக்கிழார். - (திரு ஆரூர் - 35), அரசன் குடிகளைத் துன்பவெயிலினின்று காத்தற்கு அடையாள மாகவே, வெண்கொற்றக்குடை தாங்கியுள்ளான். கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ! புறம் - 35 : 19 - 21) என்றார் வெள்ளைக் குடிநாகனார். பலகுடை நீழலும் தம்குடைக் கீழ்க் காண்டர் அலகுடை நீழ லவர் (குறள். 1034) என்று அரசனுடைய நாட்டைக் 'குடை நிழல்', என்று வள்ளுவர் கூறியதும் இக்கருத்துப் பற்றியே. (சொல். 104) அரசர் இல்லற வாழ்க்கை மூவேந்தரும், பெருநில மன்னர் குடியிலும் குறுநில மன்னர் குடியிலும் வேளிர் குடியிலும் பெண் கொண்டனர். அவருக்குப் பல தேவியர் இருந்தனர். அவருள் தலைமையான கோப்பெருந் தேவிக்கு அரசனுக்குள்ள மதிப்பிருந்தது. ஓலக்க மண்டபத்திலும் சூழ்வினைக் கூட்டத்திலும் நகர்வலத்திலும், கோப்பெருந் தேவியும் அரசனொடு கூட அமர்ந்திருப்பது வழக்கம். தேவிமாருள் அரசனால் சிறப்பாகக் காதலிக்கப்படுபவள் காமக்கிழத்தி எனப்படுவாள். ஒருவர்க்கே உரிமை பூணுங் குலப்பரத்தைமகளாய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டவள் காமக்கிழத்தி என, நம்பியகப் பொருள் கூறும். உதயகுமரன் மணிமேகலையை இவ்வகையில் மணக்க விரும்பியிருக்கலாம். சங்ககாலத்தரசர் சிலர் சேரிப் பரத்தையரொடும் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. பரத்தையர் சேரியிலுள்ள மகளிர்க்குச் சேரிப்பரத்தையர் என்றும், அவருள் அரசனால் காதலிக்கப்படுபவட்குக் காதற்பரத்தை யென்றும், அவனால் வரைந்து கொள்ளப்பட்ட பரத்தைக்கு இற்பரத்தையென்றும் பெயர். அரசன் தொடர்பு கொள்ளும் பரத்தையரெல்லாம், ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/222&oldid=1431792" இலிருந்து மீள்விக்கப்பட்டது