பக்கம்:தேவநேயம் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசர் இல்லற வாழ்க்கை பாவாணர் 207 கூறுவதால், அரசனொடு நெருங்கிப் பழகுபவர்க்கெல்லாம் அச்சிறப்பளிக்கப் பட்டிருந்ததாகத் தெரிகின்றது. அரசனுக்கு உட்பகையும் அறைபோகு வினைஞரும் பற்றிய அச்சமிருக்கும் போது, அரண்மனை மருத்துவர் அவன் உணவை அன்னம் சக்கரவாகம் கருங்குரங்கு முதலிய உயிர்களைக் கொண்டு நோட்டஞ்செய்வர். அரசன் உண்டபின் அவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பவனுக்கு அடைப்பையான் (அடைப்பைக்காரன்) என்று பெயர். அரண்மனைச் செலவெல்லாம் அரசியற் செலவாகவே கருதப் பட்டது. அரசியற் செலவும் அரண்மனைச் செலவும் போக எஞ்சிய பொதுவகை (சாதாரண)ப் பொருள்களெல்லாம், கொடைக்குப் பயன்படுத்தப்பட்டன. அரசர்க்கே தகும் அருவிலையணிகலன் களும், பெருமணிகளும், பெருந்தொகை யான பொற்காசுகளும், அரசன் சொந்த உடைமையாகப் போற்றப்பட்டன. குறிப்பிட்ட நிறைக்கு மேற்பட்ட மணிக்கற்களைக் குடிகள் வைத்திருக்க வாவது நாடு கடத்தவாவது கூடாதென்றும். அரசனிடத்தில் ஒப்பு வித்து விலைபெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், கண்டிப்பான அரசவிதியிருந்தது. அரசனுக்குச் சொந்தமாக இருந்த நிலத்திற்குக் கண்டுழவு என்று பெயர். அரசியர்க்குச் சிறு பாட்டுச் செலவிற் கென்று நிலங்களும் ஊர்களும் விடப்பட்டிருந்ததாகவும் தெரிகின்றது. அரசன் இன்பமாகப் பொழுதுபோக்குவதற்குப் பல வழிகள் இருந்தன. கண்போலும் நண்பரோடு அளவளாவலும், 'ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விப் புலவரொடு பயிலலும், நகையாண்டி சொற்கேட்டலும், வட்டாட்டு வல்லாட்டு புனலாட்டு முதலிய விளையாட்டுக்களை யாடலும், இலவந்திகைச் சோலைக்கும் செய்குன்றிற்கும் நெய்தலங்கானலுக்கும் உலாப் போதலும், பாணர் பாடினியர் கணிகையரின் இசைகேட்டலும், விறலியர் கணிகையர் சாக்கையரின் கூத்துக் காண்டலும், வேட்டை யாடலும் மலைவளங் காணலும், பிறவும், அரசன் இன்பமாகப் பொழுதுபோக்கும் வழிகளாம். அரசன் உலாப்போகும் போது தோழியரொடு செல்வது வழக்கம். (அரசன் தோழியரொடு செல்லும் இன்பவுலாவும், நகர்வலம் வரும் வெற்றியுலாவும், வேறுபட்டவை) அவருக்கு அரசனொடு மெய்தொட்டுப் பயில வும் விளையாடவும் உரிமையுண்டு, வையமுஞ் சிவிகையு மணிக்கா லமளியு முய்யா னத்தி னுறுதுணை மகிழ்ச்சியுஞ் சாமரைக் கவரியுந் தமனிய வடைப்பையுங் கூர் துனை வாளுங் கோமகன் கொடுப்பப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/224&oldid=1431794" இலிருந்து மீள்விக்கப்பட்டது