பக்கம்:தேவநேயம் 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2081 தேவநேயம் அரசர் கால மொழி... பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொற்றொடி மடந்தையர் என்னும் சிலப்பதிகாரப் பகுதியால் (14:126-131), அரசன் பரத்தைய ரொடு உலாப்போதலும், அவர்க்கு அவன் பற்பல வரிசையளித் தலும், உண்டென்பது பெறப்படும். அரசர், பருவம் வந்த புதல்வரைத் துணையரையராக அல்லது மண்டலத் தலைவராக, வெவ்வேறிடத்தமர்த்தி வைப்பது பெரும் பான்மை. அவர் தம் புதல்வியரை அரச குடியினர்க்கன்றிப் பிறர்க்குக் கொடுப்பதில்லையென்பது, 3 ஆம் குலோத்துங்கன் அம்பிகாபதியைக் கொன்றதினால் அறியப்படும். நாடுகாவல், சந்து (பகைதணிவினை), போர், நட்பரசர் விழா முதலிய காரணம்பற்றி, அரசன் தன் தேவியரிடத்தினின்று பிரிந்து போவன், பிரிவுக்காலத்தில், இன்றியமையும் அணிகழற்றலும், மெய்யலங்கரியாமையும், அளவாக வுண்டலும், நாளெண்ணிக் கழித்தலும், மகிழாதிருத்தலும் தெய்வத்தை வேண்டலும்; மீட்சிக்காலத்தில், வரவு கண்டு மகிழ்தலும், விருந்தயர்தலும்; தேவியர் மேற்கொள்ளுஞ் செயல்களாம். அரசன் இறப்பின், தேவியரும் உடன் இறப்பர்; அல்லது உடன்கட்டையேறுவர்; அல்லது கைம்மை பூணுவர். அவர் முன்னிருவகையில் இறப்பதே பெரும்பான்மை. (ப.த.ஆ) அரசர் கால மொழி நிலைமை முதற்காலத்தில், தமிழ் எல்லாத் துறைகளிலும் தனியாட்சி செலுத்தி முழுத்தூய்மையாய் வழங்கி வந்தது. ஆயின், இடைக் காலத்தில் வடமொழி 'தேவபாடை' என்று மூவேந்தராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதனால், புரோகிதர் நடத்தும் பூசை கரணங்கட்கெல்லாம் தமிழ் விலக்கப்பட்டது. வடசொல் வழங்குவது உயர்வு என்னுங் கருத்தும் நாளடைவில் எழுந்தது. தமிழரசரும் ஒரு சில தமிழ்ப்புலவரும் தமிழைப் புறக்கணிக்கவுந் தலைப்பட்டனர். தொன்றுதொட்டுத் தமிழ்ச்சங்கம் இரீஇத் தமிழை வளர்த்துத் தமிழ்நாடன் என்று சிறப்பிக்கப்பெற்ற பாண்டியன் குடியினரே, கி.பி.3 ஆம் நூற்றாண்டில் சங்கத்தைக் குலைத்துவிட்டனர். அதன் பின், 11 ஆம் நூற்றாண்டில் அதைப் புதுப்பிக்குமாறு பொய்யா மொழிப்புலவர் செய்த பெருமுயற்சியும் வீணாய்ப் போயிற்று. வடசொற்கள் தொல்காப்பியர் காலத்திலேயே, தமிழில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. ஆயின், அவர் காலத்தில் தற்பவமாக வும் சிதைவாகவும் ஒரோவொன்றாய் அருகியே வழங்கின. பிற்காலத்திலோ, அவை படிப்படியாய்ப் பெருகி வந்ததுடன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/225&oldid=1431795" இலிருந்து மீள்விக்கப்பட்டது