பக்கம்:தேவநேயம் 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசர் கால மொழி. பாவாணர் 209 கடைச்சங்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில், பொது மக்கட்கென் றேற்பட்ட கல்வெட்டுக்களில் தற்சமமாகவும் கிரந்தவெழுத்திலும் தோன்றி, கல்வெட்டுத் தமிழையே தமிழர்க்கு விளங்காததும் பிழை மலிந்ததுமான மணிப்பவளக் கலவை மொழியாக மாற்றி விட்டன. அரசர் பெயர் (அரசர்களும் அவர்களைச்சார்ந்த உறவினரும்) அகத்தில் காரிகிள்ளி இருக்குவேள் என்பன போன்ற பழந்தமிழ்ப்பெயர் தரித்திருத்தல் வழக்கம். ஆயின், உத்தியோக முறைமையில் பராந்தகன் இராஜராஜன் இராஜாதித்தன் என்னும் வடமொழிப் பெயர்களைத் தரிப்பார்கள் - சோ. பக்71) தெய்வப் பெயர் இடப்பெயர் முதலிய பல்வகைப் பெயர்களும், நாளடைவில் வடசொற்களாய் மாறின. எடுத்துக்காட்டு முற்காலச் சொல் பிற்காலச் சொல் பாண்டியவரசர் பெயர் : காய் ஜயந்த வர்மன், ஜடில சினவழுதி, கடுங்கோன், வெண் பராந்தகன், ராஜசிம்மன், டேர்ச்செழியன், முடத்திருமாறன். ஜடாவர்மன் (பராக்கிரம பாண்டியன்) தெய்வப் பெயர் : சொக்கன், சுந்தரன், பிருகதீஸ்வரன், பெருவுடையான், முருகன், சுப்ரமணியன், விஷ்ணு , திருமால் , திருமகள், நாமகள். லஷ்மி, சரஸ்வதி. இடப்பெயர் : தகடூர், முதுகுன்றம், தர்மபுரி, விருத்தாசலம், மறைக்காடு, மயிலாடுதுறை. வேதாரண்யம், மாயூரம். பல்வகைப் பெயர் : அரசு கட்டில், சிங்காசனம் (சிம்மாசனம்) அரியணை, ஆட்டை வாரியம், சம்வத்ஸர (வாரியம்) திருவோலை, கள்ளக் கையெழுத்து, நியோகம், கூட லேகை, கல்வெட்டு, சிலாசாஸனம். (தடித்த எழுத்துள்ள வடசொற்கள் அவற்றுக்கு தேரான தென்சொற்களின் மொழிபெயர்ப்பாகும்). இனி, சில தென் சொற்கள் தம் தென்மொழி வடிவிழந்து வடமொழி வடிவில் வழங்கத் தலைப்பட்டன. எ-டு: தென்மொழி வடிவம் வடமொழி வடிவம் அரசன் ராஜன் அவை சபை திரு படி பிரதி மக்களைத் தாக்கிய குலப்பிரிவினை நாளடைவில் இலக்கியத் தையும் தாக்கிற்று. வெண்பா அந்தணர்பா என்றும், ஆசிரியப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/226&oldid=1431796" இலிருந்து மீள்விக்கப்பட்டது