பக்கம்:தேவநேயம் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

210 தேவநேயம் அரசர் பாகுபாடு அரசர் பா என்றும், கலிப்பா வணிகர்பா என்றும், வஞ்சிப்பா வேளாளர் பா என்றும், வகுக்கப்பட்டதுடன், கலம்பகச் செய்யுட்கள் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற் றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதும் பாடப்படும் எனவும் இலக்கணம் விதிக்கப்பட்டது. பாணரைத் தீண்டாமை தாக்கியதால், இசைத்தமிழும் நாடகத் தமிழும் 12 ஆம் நூற்றாண் டிற்குமேல் வழக்கொழிந்தன. அவற்றிற்குரிய நூல்களும் இறந்துபட்டன. தமிழ் கற்பார்க்குப் போதிய அரசியலூக்குவிப்பின்மையால், முதலிரு சங்ககாலத்தும் முத்தமிழாயிருந்த இலக்கண நூல், கடைச்சங்க காலத்தில் ஒரு தமிழாயும், 11 ஆம் நூற்றாண்டிற்கு மேல் அதுவும் நிறைவின்றி எழுத்துச் சொல்லளவாயுங் குறுகி விட்ட து. | தமிழ் வடமொழிக் கிளையெனக் கருதப்பட்டு, 11 ஆம் நூற்றாண்டில் வடமொழி யிலக்கணந் தழுவி வீரசோழியம் என்னும் தமிழிலக்கண நூலும் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திலிருந்து ஆரியக் கருத்துக்களும் தமிழிலக் கியத்திற் புகுத்தப்பட்டதனால், தமிழ் வரலாற்றிலும் தமிழ்நாட்டு வரலாற்றிலும் புராணக்கருத்துக்கள் புகுந்தன. பிற்காலத்து நூல்களெல்லாம் பெரும்பாலும் கலைத்துறை பற்றாது மதத்துறையே பற்றின. 14 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட வில்லிபாரதத்தில், வடசொற்கள் வரைதுறையின்றி ஆளப்பட்டன. தமிழ்ப்புலவரையுங் கலைஞரையும் போற்றுவாரின்மையால், நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் இறந்துபட்டன. தூயதமிழ் தாழ்த்தப்பட்டோர் மொழி எனத் தாழ்த்தப்பபட்டதனால் நூற் றுக்கணக்கான தென்சொற்களும் மறைந்தொழிந்தன. (ப.த.ஆ.) அரசர் பாகுபாடு சிற்றரசர் தலைமையரசர் பேரரசர் எனத் தமிழரசர் முத்திறப் பட்டிருந்தனர். இம் முத்திறத்தாரும், முறையே, குறுநிலவரசரும் பெருநிலவரசரும் பலநிலவரசரும் ஆவர். சிற்றரசர்க்கு மன்னன் என்னும் பெயரும், தலைமையரசர்க்கு வேந்தன் கோ (கோன்) என்னும் பெயரும், மரபாகவுரிய. இதை, கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர் என்னும் தனிப்பாடற் செய்யுளடியாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/227&oldid=1431797" இலிருந்து மீள்விக்கப்பட்டது