பக்கம்:தேவநேயம் 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசர் பாகுபாடு பாவாணர் வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தே வேம்பே ஆரென வரூஉம் என்னும் தொல்காப்பிய அடிகளாலும் (1006), அறியலாம். பேரரசரைப் பெருங்கோ அல்லது மாவேந்தன் என்னும் பெயரால் அழைக்கலாம். கோ என்னும் பெயர் வேந்தருக்கு மட்டுமன்றி, அவருக்கடங்கி அவர்நாட்டுள் ஒவ்வொரு பகுதியை ஆளும் அவர் தாயத்தார்க்கும், சிற்றரசருள் பெரியவர்க்கும் வழங்கும். சேரன் செங்குட்டுவனின் தாயத்தாரான இரும்பொறை மரபினருள் ஒருவனான சேரமான் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையும், சிற்றரசருள் ஒருவனான விச்சிக்கோவும், கோவென்று பெயர் கொண்டிருந்தமை காண்க, வேந்தன் என்னும் பெயரோ, என்றும் தலைமையரசனையே குறிக்கும். | தமிழகச் சிற்றரசர், எயினர் வேட்டுவர் முதலிய பாலைநிலக் குடிகளின் தலைவராகிய குறும்பரசரும், சிறுமலைக் கிழவரும், உழுவித்துண்ணும் வேளாண் குடியினரான வேளிரும்; படைத் தலைவரும், அரச குடும்பத்தினரும், அரசியற் பேரதிகாரிகளு மாகப் பல வகையர்; தொல்வரவினர் புதியர் என இருபாலார்; ஊர்க்கிழவர் முதல் மண்டலத் தலைவர்வரை பல திறத்தார். கொங்கர், கோசர், கங்கர், கட்டியர், பங்களர், துவரை வேளிர், அதிகர், ஆவியர் என்னும் பலகுடிச் சிற்றரசர் சேரனுக் கடங்கிய வராகவும்; பொத்தப்பிராயர், காடவராயர், பல்லவர் (பல்லவ தரையர்), தொன்டையர், சம்புவராயர், இலாடராயர், மலைய மானர் (சேதிராயர்), வாணகோவரையர் முனையரையர் (முனைய தரையர்), ஓய்மானர், முத்தரையர், மழவராயர், பழுவேட்ட ரையர், இருக்கு வேளிர் முதலிய பலகுடிச் சிற்றரசர் சோழனுக் கடங்கியவராகவும்; ஆயர் (ஆய்குடியர்), களப்பாளர் (களப்பிரர்) முதலிய சிலகுடிச் சிற்றரசர் பாண்டியனுக் கடங்கியவராகவும்; பல தலைமுறையினரா யிருந்துவந்தனர். கொங்குமண்டலம் சோழப் பேரரசிற்குட்பட்ட, பிற்காலத்தில், கொங்கர் கங்கர் நுளம்பர் முதலியோர் சோழருக்கடங்கியவராயினர். இனி, சிற்றரசர்க்கடங்கிய கீழ்ச் சிற்றரசருமுண்டு. வேங்கட மலையைச் சார்ந்த ஒரு சிறு நாட்டுத் தலைவனான கரும்பனூர் கிழானும், வேங்கடமலைத் தலைவனான புல்லியும், பல்குன்றக் கோட்டத் தலைவனான நன்னனும், தொண்டை மானுக்கடங்கிய கீழ்ச் சிற்றரசர். அடங்கா மன்னரை யடக்கு மடங்கா விளையுள் நாடுகிழ வோயே (புறம் 199)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/228&oldid=1431410" இலிருந்து மீள்விக்கப்பட்டது