பக்கம்:தேவநேயம் 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

212 தேவநேயம் அரசர் பாகுபாடு என்று விச்சிக்கோ கபிலராற் பாடப்பெற்றிருப்பதால் அவன்கீழ்ப் பல மன்னரிருந்தமை அறியப்படும். இனி, கடைச்சங்க காலத்தில், அகுதை, எயினன், எருமையூரன், ஏறைக்கோன், ஏனாதிதிருக்கிள்ளி, ஓரி, கடியநெடுவேட்டுவன், குமணன், கொண்கானங்கிழான், சிறுகுடிகிழான்பண்ணன், தழும்பன், தாமான்தோன்றிக்கோன், திதியன், நள்ளி, நாலை கிழவன் நாகன், நாஞ்சில் வள்ளுவன் கந்தன், பழையன், பாரி, பிட்டங்கொற்றன், மல்லிகிழான் காரியாதி, மூவன், வல்லார் கிழான் பண்ணன், வெளிமான், வேங்கைமார்பன் என அரசகுடி கூறப்படாத பற்பல சிற்றரசரும் கீழ்ச்சிற்றரசரும் தமிழ்நாடு முழுமையுமிருந்தனர். தமிழரசருள், சேர சோழ பாண்டியராகிய முக்குடியரசரும், வேந்தர் என்று கூறப்படும் தலைமையரசராவர். முதற்காலத்தில் அவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. இதனாலேயே, அவர் வேந்தர் எனப்பட்டார். வேந்தன் என்னும் பெயர் வேய்ந்தோன். (கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயர் கொன்றை வேந்தன் என மருவியிருத்தல் காண்க) என்பதன் மரூஉ. வேய்தலாவது முடியணிதல், முடியணியும் முத்தமிழரசரையும் முடியுடை மூவேந்தர் என்று கூறுவது மரபு. ஒரே காலத்தில், ஓர் அரச குடியினர் பலர், மாற்றாந்தாய் மக்களும் மற்றத் தாயத்தாருமாகச் சமவுரிமையாளராக விருந்து, ஒரு பெருநாட்டின் வெவ்வேறு பகுதியைத் தனித்தனி ஆண்டுவரின், அவரனைவர்க்கும் முடியணி யும் உரிமையும் கோவென்னும் பெயரும் உண்டு. பிற் காலத்தில், ஒரு பெருநாட்டினின்று தனியரசாய்ப் பிரிந்துபோன சிற்றரசரும் இவ்வுரிமைகளைத் தாமே அடைந்து விட்டனர். மூவேந்தருள் ஒருவன் இன்னொருவனை வென்று அடிப்படுத்தி னவனாயின், அவனைப் பேரரசன் என்றும், அவனது அரசைப் பேரரசு என்றும் அழைக்கலாம். தமிழ்வேந்தருள்ளேயே ஒருவரிருவரை வென்று இருமுடிப் பேரரசும் மும்முடிப் பேரரசும், அவருடன் ஈழவரசன் வேங்கை (கீழைச்சளுக்கி) யரசன் போன்றாரை வென்று பன்முடிப் பேரரசும், நிறுவிய சேர சோழ பாண்டியப் பேரரசர் பலராவர், வடிம்பலம்ப நின்ற பாண்டியன், கரிகால் வளவன், சேரன் செங்குட்டுவன் என்பவர் பன்முடிப் பேரரசர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டாவர். மூவேந்தரும் தலைமையரசரென்றும், பிறரெல்லாம் சிற்றரச ரென்றும், மரபும் பெரும்பான்மையும் பற்றிப் பொதுவாகக் கூறப்படினும்; காலச் சக்கரத்தின் சுழற்சியால், இடையிடை, சிற்றரசக் குடியினர் பேரரசரும் பேரரசக் குடியினர் சிற்றரசரும் ஆயினர் என்றறிதல் வேண்டும். வேந்தர் குடியைச் சேர்ந்த சோழர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/229&oldid=1431798" இலிருந்து மீள்விக்கப்பட்டது