பக்கம்:தேவநேயம் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

214 தேவநேயம் அரசர் வகை வழக்கம்; எரித்தல் பிற்கால வழக்கம். அரசருக்கு இறுதிச் சடங்கியற்றல் பள்ளிபடுத்தல் (பள்ளி படை என்றும், அவர் நினைவுக்குறியாக எழுப்பப்படுங் கட்டிடம் பள்ளிப்படைக் கோயில் என்றும், பெயர்பெறும். அரசக்குடி முடிவு : முத்தமிழரசரும் தமிழாலும் மணவுறவாலும் இணைக்கப்பட்டு ஒற்றுமையாயிருந்த வரை, அசோகப் பேரரசனாலும் அவரை அசைக்கமுடியவில்லை. சங்ககாலத் திற்குப் பிற்காலத்தில், தமிழ் பேணாமை ஒற்றுமையின்மை குலப்பிரிவினை முதலிய காரணங்களால், முத்தமிழ் நாடும் மூவேறு பிரிந்து வலிமை குன்றிப்போய்ச் சோழ பாண்டிய நாடுகள் முதலாவது 14 ஆம் நூற்றாண்டில் தில்லி மகமதியப் படைகட்கும் பின்பு 15 ஆம் நூற்றாண்டில் விசயநகர வடுகப் படைகட்கும், எளிதாய் இரையாயின. பாண்டி நாட்டு வலிமை அதன் தாயப் போர்களாலும் தேய்ந்து மாய்ந்தது. இறுதிப் பாண்டியன் கிபி.1652 வரை இருந்தான். சேரர், குடியில் இறுதியாக விருந்த அரசர் வலிமையற்றவரா யிருந்ததினால், சேரநாடானது, வேணாடு (திருவதங்கோடு) கொச்சி கோழிக்கோடு கோலத்து நாடு முதலிய பல சிறு தனியரசு களாகப் பிரிந்து போனதுடன், 17 ஆம் நூற்றாண்டில் வடசொல் கலப்பால் மலையாள நாடாகவும் திரிந்துவிட்டது. இங்ஙனம், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு இருந்தவை யெனப் பாராட்டப்பெற்ற மூவேந்தர் குடிகளும், 17ஆம் நூற் றாண்டிடையில் முடிவுற்றன. (பத ஆ. அரசர் வகை குறிஞ்சித் தலைவன் - மலையன், வெற்பன், சிலம்பன், பொருப்பன் கானக நாடன் (வெற்பு, சிலம்பு, பொருப்பு என்பன மலையின் பொதுப் பெயர்கள்). முல்லைத் தலைவன் - குறும்பொறை நாடன், அண்ணல், தோன்றல். மருதத் தலைவன் - ஊரன், மகிழ்நன், கிழவன். பாலைத்தலைவன் - விடலை, மீளி, காளை. நெய்தல் தலைவன் - கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம் புலம்பன். நாட்டுத் தலைவர் - குரிசில் - பிரபு, வேள் - குறுநிலமன்னன்; குறும்பன் - கொள்ளைத் தலைவன்; மன்னன் - சிற்றரசன்; கோன் அல்லது கோ - அரசன்; வேந்தன் - முடிவேய்ந்த பேரரசன், இந்திரன், (சொல் 39 )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/231&oldid=1431800" இலிருந்து மீள்விக்கப்பட்டது