பக்கம்:தேவநேயம் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

216 தேவநேயம் அரசா விழாக்கள் யின் போதும், மேற்கூறிய அன்றாட நிகழ்ச்சி வினைகள் மாறியும் நிகழும். பொதுவாக, அறத்தை உயிர்நாடியாகக் கொண்டிருந்த செங் கோலரசரெல்லாம். எவ்விடத்தும் எந்நேரத்தும், பெருமுறை கேடான காரியங்களைக் கவனித்தற்கு ஆயத்தமாயிருந்ததாகவே தெரிகின்றது. "தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவன தருமம் அருத்தம் காமம் என மூன்று; அம் மூன்றினையும் ஒரு பகலை மூன்று கூறிட்டு முதற்கட் பத்துநாழிகையும் அறத்தொடு படச்செல்லும், இடையன பத்து நாழிகையும் அருத்தத்தொடு படச்செல்லும்; கடையன பத்து நாழிகையும் காமத்தொடு படச்செல்லும்; ஆதலான் தலைமகன் முதற்கண் நாழிகை தருமத்தொடு படுவான்; தலைமகளும் வேண்டவே தானும் வேண்டிப்போந்து அத்தாணி புகுந்து அறங்கேட்பதும் அறத்தொடு படச்சொல்வதுஞ் செய்யும், நாழிகை அளந்துகொண்டு இடையன பத்து நாழிகையும் இறையும் முறையுங்கேட்டு அருத்தத்தினொடு பட்டனவே செய்து வாழ்வானாம். அவ்வருத்தத்து நீக்கத்துக் கடையன பத்து நாழிகையில் தலைமகளுழைப் போதரும்", என்பது இறை யனாரகப் பொருளுரை (பக். 226). அரசர்க்குக் "காலைக்கடன் கழித்தலும், உலகத்திலிருந்து நாடு காவற்றொழில் செலுத்தலும், விருந்துடன் அடிசில் கைதொடலும், நாவலரொடு கல்வி பயிறலும், ஆடல் பாடல்களில் களித்தலும், மடவாரொடு கூடலும், துயிறலும், துயிலுணர்ந்து தேவர்ப்பரா வலுமாகிய காலவரை எட்டு", என்பது தஞ்சைவாணன் கோவையுரை (பக். 248) (ப.த.ஆ. அரசர் விழாக்கள் அரசர் விழாக்கள் பொதுவும் சிறப்பும் என இருபாற்படும். அவற்றுட் பொதுவாவன : (1) மண்ணு மங்கலம் : அரசன் முதன் முறையாக முடிசூடும் போதும், ஆண்டுதொறும் வரும் முடிசூடிய நாளிலும், கொண்டாடப்பெறும் விழா மண்ணுமங்கலம் ஆகும். அது நீராடி முடிசூடும் மங்கல வினையாதலால் மண்ணுமங்கலம் எனப்பட்டது. மண்ணுதல் - நீராடுதல், தொல்காப்பியர் இதனைச் "சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம்” என்பர் (1037). உழிஞைப் போரில், மதிற்கண் ஓரரசன் மற்றோரரசனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்டவேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலம், 'குடுமி கொண்ட மண்ணுமங்கலம்' (தொல். 1014) எனப்படும். அது அகத்தோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/233&oldid=1431802" இலிருந்து மீள்விக்கப்பட்டது