பக்கம்:தேவநேயம் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

218 தேவநேயம் அரசன் நாளிற் கொண்டாடப்பட்ட சதயத் திருவிழாவும், போன்றவை சிறப்பு விழாவாகும். (ப.த.ஆ. அரசன்' சிறுகுழந்தைகட்கு எங்ஙனம் தாயும் தந்தையும் தெய்வமோ அங்ஙனமே பழங்கால மக்கட்கு அரசன் தெய்வம். உணவளித்தும் பகையழித்தும் மக்களைக் காத்த காவலன் தெய்வமாக அல்லது கண்கண்ட தெய்வமாகக் கருதப்பட்டும் வணங்கப்பட்டும் வந்தான். மணவறையில் 'அரசாணிக் கொம்பு' நட்டும் அல்லது கட்டும் வழக்கம் பண்டைக்காலத்தில் அரச வணக்கம் பற்றித் தோன்றிய தாகத் தெரிகின்றது (சொல். 24) அரசன்' அரசன் - ராஜன் ம. அரசன், க. அரச, து, அரசு, L. regis,rex, Kelt, rig, OGrik, Goth reiks, AS rice, Erich. அரவணைத்தல் என்பது தழுவுதலையன்றித் தழுவிக்காத்தலையே குறித்தலால், அரவணை என்னும் கூட்டுச் சொல்லின் முதலுறுப்பு: பாம்பைக் குறியாது காக்கும் வலிமையுள்ள உயர்திணையான ஒருவனையே குறித்தல் வேண்டும். அகரம் பல சொன் முதலில் உகரத்தின் திரிபாயிருத்தலால், அரவு என்பது உரவு என்பதன் திரிபென்று கொள்ளுதல் தக்கதாம். உரவு வலிமை, வலி என்பது பண்பாகுபெயராய் வலிமையுள்ளவனையுங் குறிக்கும். "காய மனவசி வலிகள்” (மேருமத். 1097. Authority என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக. உலகில் வலிமை மிக்கவன் அரசனாதலின், உரவோன் என்னும் சொல் அரசனையே சிறப்பாகக் குறிக்கும். முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன்ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ யொருதா மாகிய வரவோ ரும்பல் என்று பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது காண்க (புறம். 18). வுகரவீறு சில சொற்களில் சுகர வீறாகத் திரிகின்றது. எ-டு: ஏவு - ஏசு, பரவு - பரசு, விரவு - விரசு துளவு - துளசு துளசி, இம்முறையில் அரவு என்பது அரசு என்றாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/235&oldid=1431804" இலிருந்து மீள்விக்கப்பட்டது