பக்கம்:தேவநேயம் 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசன் பாவாணர் 219 அரசு - அரசன். இச்சொல் குமரிக் கண்டத்தில் தலைக்கழகக் காலத்திலேயே தோன்றியதாகும். அகப்பொருளிலக்கணத்தில் குறிக்கப்பெறும் நால்வகை வகுப்பாருள் இரண்டாமவர் அரசர். அரசன் என்பது, கிழவன், வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் ஐவகைத் தலைவர்க்கும் பொதுப் பெயராம் - ஐவகை மரபின் அரசர் பக்கமும் என்னுமிடத்து (தொல். 1021) வேறு பெயர் பொருந்தாமை காண்க. அரசன் - அரைசன் - அரையன், அரசு - அரைசு. தெ. ராயலு, க. ராயரு E.roy, மாவரையன் - மாராயன் - மாராயம். மாராயம் பெற்ற நெடுமொழி யானும் (தொல். பொ. 63). இந்தியர்க்குள் வழங்கிவரும் ராய் என்னும் பட்டப் பெயர், அரையன் என்பதைத் தழுவியதாகும். ராவ் என்பது அரவன் (அரசன்) என்பதைத் தழுவியது போலும்! மாராயம் என்பது தொல்காப்பியர் காலத்தில் மாவரையம் என்றே வழங்கியிருத்தல் வேண்டும். பிற்காலத்தில் எழுதினவன் பழமொழிப்படி ஏட்டைக் கெடுத்ததாகத் தெரிகின்றது. அரையன் - வ, ராய, யகரம் பெற்ற இச்சொல் வடிவிற்குத் தமிழில் தவிர வேறெம்மொழியிலும் விளக்கமின்மை காண்க. ராஜ என்னும் சொல்லைரஜ் என்று குறுக்கி ஆள் (to rule) என்றும், ஒளிர் (to shine) என்றும், செயற்கை முறையில் வடவர் பொருள் கற்பிப்பது எள்ளளவும் பொருந்தாது, (வ.வ.) இனி, அத்திரு, அத்து(க) மானி, இலணை, கணவம், சுவலை, திருமரம், பணை எனப் பல பெயர்கண்ட அரசமரத்திற்கு, அப்பெயர் தொன்று தொட்டு உலக வழக்கில் வழங்கி வருவதும், அச்சொல்லின் தமிழ்மைக்கு ஒரு சான்றாகும். ம. அரசு, க. அரசெ, தெ. ராய். நாட்டு மரங்களுள் அரசமரம் மிக ஓங்கி வளர்வதால், மரவரசு என்னும் பொருளில் அது அப்பெயர் பெற்றது. "அத்திபோல் துளிர்த்து, ஆல்போற் படர்ந்து, அரசுபோலோங்கி, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்," என்னும் மரபுத் தொடர்மொழியையும் நோக்குக. (வ.வ. 76-78.) அரசன் - வ. ராஜன், ராஜா - இ.ராஜ், தெ. ராஜு. அரையன் - அரையர் - ராயர் - க. ராயரு, தெ. ராயலு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/236&oldid=1431805" இலிருந்து மீள்விக்கப்பட்டது