பக்கம்:தேவநேயம் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2201 தேவநேயம் அரசன் தகுதிகள் அரையன் - ராயன் - வங். ராய். அரவன் - (ராவன்) - மராட். ராவ். அரசன் - அரசு, அரையன் - அரைசு. அரசன் - Gk. archon=ruler, kimg. Lres,repis,OTr.res. E. rich, OE. rice, OFris, rike, Mod Fris. ryk. rik - rijck, MDu. rijke, rijck, Du.rijk, OS, riki, MLG. rike, LG.rik, OHG. richi, riche, G. reich, ON. nikr, Norw. and Sw.rik, Da.ris, Celt.rix, F.riche, Sp.rico, it. ricco. அரையன் - ராயன் - ராய் - OF. roy, Froi, ONF. rei, E. ray, roy. மேலையாரிய மொழிகளில் இச் சொற்கட்கு மூலமில்லை. சமற்கிருதத்தில் ராஜன் என்னும் சொற்கு 'ரஜ்' (ஒளிர், to shine) என்பதை மூலமாகக் காட்டி, 'ரங்' (நிறம்) என்னுஞ் சொல்லொடு தொடர்புபடுத்துவர். ஆளுதற் பொருளில், arkho அல்லது arkh-ein என்னும் கிரேக்கச் சொல்லையும், ராஜ் என்னும் சமற்கிருதச் சொல்லையும், rego என்னும் இலத்தீன் சொல்லையும், ஆளுதல் பிற்பட்ட வழக்கென அறிக அரசி= வ. ராஜ்Z, L. regina. ராஜ்Z என்னும் வடசொல்லே இன்று ராணி என்று வழங்குகின்றது. அணைத்தல் = தழுவுதல், தழுவிக் காத்தல், ஒ.நோ. தழுவுதல் = அணைத்தல், அணைத்துக் காத்தல். குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் (குறள். 544), தழுவு - தழிஞ்சி = போரிற் படைக்கலங்களால் தாக்குண்டு சேத முற்ற படையாளரைப் போற்றியுரைத்தும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கோடல், அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ (தொல். பொ. 63). அரவணைத்தல் = அரசன் தழுவுதல், அரசன் போல் தழுவிக் காத்தல். ஐயன் புரியும் அரவணைப்பும் பணவிடு. 27). அரவணைத்துக் காக்க வேண்டும் என்னும் உலக வழக்கையும் நோக்குக. இதில், அரவு என்பது அரசனையன்றிப் பாம்பைக் குறிக்காது, பாம்பணைத்தல் என்பது புணர்ச்சியைக் குறிக்குமே யன்றிப் பாதுகாத்தலைக் குறிக்காது, (தமிழர் வ.) அரசன் தகுதிகள் ஓர் அரசனுக்குப் பின் அரியணை யேறற் குரியவன், அவ்வரசனு டைய கோப்பெருந்தேவியின் மூத்தமகனாவன், மூத்தமகன் இறந்துவிடின் இளையமகனும், ஆண்மக்களே இல்லாதபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/237&oldid=1431806" இலிருந்து மீள்விக்கப்பட்டது