பக்கம்:தேவநேயம் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசனுந் தோட்டமும்.... பாவாணர் 221 மகள்வழிப் பேரன்மாருள் மூப்புடையவனும், பேரன்மாரும் இல்லாதபோது கோப்பெருந்தேவிக்கடுத்த தேவியின் புதல்வருள் மூப்புடையவனும், அவரும் இல்லாதபோது பிற நெருங்கிய உறவினருள் தகுதிமிக்கவனும், அரியணையேறுவர். அரசனாதற்குரியவன், இளமையிலேயே பல கலைகளையுங் கற்று, பல்வகைப் படைப்பயிற்சியும் பெற்று, வேட்டை யாடுவதிலும் தேர்ச்சியுற்று, அறிவு ஆற்றல் அன்பு அறம் மறம் முதலிய குணங்களை ஒருங்கே உடையவனாய், பல அருஞ் செயலும் அறச்செயலும் ஆற்றிக் குடிகளின் உள்ளத்தைக் கவர்ந்தவனாய், இருத்தல் வேண்டும். மக்கள் யாக்கை -சிறப்பாக அரசர் யாக்கை - நிலையற்ற தாதலின், ஆளும் அரசன், தனக்குப் பின்னால் அரசியற் குழப்பமும் இடர்ப்பாடும் நேராதவாறு, தன் காலத்திலேயே மூப்புத் தகுதியுள்ள தன் மகனுக்கு அல்லது பேரனுக்கு, மண்டை கவித்து இளவரசுப் பட்டங்கட்டி, ஆட்சித் துறையிலும் போர்வினை யிலும் பிறவற்றிலும் பயிற்சி அளிப்பது வழக்கம். அரசன் யாருக்கு இளவரசுப் பட்டம் கட்டினும், ஆட்சித்திறனும் அரசியற்பொறுப்புச் சுற்றத்தின் உடன்பாடும் குடிகளின் இணக்கமும் இருந்தாலொழிய, ஆட்சியைக் கடைபோகக் கொண்டு செலுத்த முடியாது. பழவிறல் தாயம் புதுவிறல் தாயம் என்னும் இருவகைத் தாயங்களுள், மூவேந்தர் தாயம் பழவிறல் தாயமாகவும், குறுநில மன்னர் தாயம் இருவகையாகவும் இருந்து வந்தன. (ப.த.ஆ. அரசனுந் தோட்டமும் - விளையாட்டு அரசனும் சேவகனும் தோட்டக்காரனும் தோட்டமும் (அதாவது பூசணிக்கொடிகளும்) என ஆடுவார் முதலாவது பிரிந்து கொள்வர். அரசன் சற்று எட்டத்திலிருந்து கொண்டு, பூசணித் தோட்டம் போடும்படி சேவகன் வழித் தோட்டக்காரனை ஏவுவன், தோட்டக்காரன் வேலை தொடங்குவன். அரசன் அடிக்கடி தன் சேவகனை ஏவித் தோட்டத்தின் நிலைமை யைப் பார்த்துவிட்டு வரச் சொல்வன். சேவகன் வந்து கேட்கும் ஒவ்வொரு தடவையும், முறையே, ஒவ்வொரு பயிர்த்தொழில் வினை நிகழ்ந்துள்ளதாகத் தோட்டக்காரன் சொல்வான். இங்ஙனம் உழுதல், விதைத்தல், நீர்பாய்ச்சல், முளைத்தல், ஓரிலை முதற் பலஇலைவரை விடல், கொடியோடல், களையெடுத்தல், பூப்பூத்தல், பிஞ்சுவிடல், காய் ஆதல், முற்றுதல் ஆகிய பல வினைகளும் சொல்லப்படும். உழுதல் முதற் காய் ஆதல் வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/238&oldid=1431807" இலிருந்து மீள்விக்கப்பட்டது