பக்கம்:தேவநேயம் 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

222) தேவநேயம் அரசிய லுறுப்புகள் ஒவ்வொரு வினையைச் சொல்லும்போதும், தோட்டத்தை நிகர்க்கும் பிள்ளைகள் அவ்வவ் வினையைக் கையால் நடித்துக் காட்டுவர். காய்கள் முற்றியதைச் சொல்லுமுன், தோட்டக்காரன் காய்களைத் தட்டிப்பார்ப்பதுபோல் ஒவ்வொரு பிள்ளையின் தலையையும் குட்டி "முற்றிவிட்டதா?" என்று தன்னைத்தானே கேட்டு, சில தலைகளை "முற்றிவிட்டது" என்றும், சில தலைகளை "முற்ற வில்லை” என்றும், சொல்லி; முற்றிவிட்டதென்று சொன்ன பிள்ளைகளை வேறாக வைப்பான். காய் கொண்டுவரும்படி அரசனால் ஏவப்பட்ட சேவகன் சில காய்களைக் கொண்டு போய்த் தன் வீட்டில் வைத்திருப்பது போல், சில பிள்ளைகளைக் கொண்டு போய்ச் சற்றுத் தொலைவில் வைத்திருப்பான். அக்காய்கள் களவு போவதுபோல், அப்பிள்ளைகள் தாம் முன்பிருந்த இடத்திற்கு வந்துவிடுவர். இங்ஙனம் இரண்டொரு முறை நிகழ்ந்த பின், சேவகன் அரசனையே அழைத்து வந்து, எல்லாக் காய்களையுங் கொண்டுபோவது போல் எல்லாப் பிள்ளைகளை யுங் கொண்டுபோவன். இதோடு ஆட்டம் முடியும், இவ்விளை யாட்டின் தோற்றம் வெளிப்படை (தநா.வி.) அரசிய லுறுப்புகள் ஒரு நாடு அல்லது சீமை (State) (1) ஆள்நிலம் (Teritory) (2) குடிகள் (Population) (3) அரசியல் (Government) (4) கோன்மை (Sovereignty) என நாலுறுப்புக்களை உடையது. இந்நான்கும் உள்ள நாட்டை நிறைநாடு என்றும், இவற்றுள் ஒன்றும் பலவுங் குறைந்ததைக் குறைநாடு என்றும் அழைக்கலாம். (1) ஆள்நிலம் : சேர சோழ பாண்டியர் என்னும் முத்தமிழரசரும், தனித்தனி ஆண்ட சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என்னும் முந்தாடும் சேர்ந்த தமிழகம் முதலாவது (தலைச்சங்கக் காலத்தில்) வடபெண்ணையாற்றிற்கும், (கிருஷ்ணா கோதாவரி மாவட்டங் களைக் கொண்ட கீழைச் சளுக்கிய நாடு வேங்கைநாடு என்றும், அதற்கு மேற்கே பம்பாய் மாகாணத் தென் பகுதியிலிருந்த மேலைச் சளுக்கியநாடு வேள்புலம் என்றும், பெயர் பெற்றிருந்த தினால், தலைச்சங்க காலத் தமிழக வடவெல்லை கிருட்டிணை யாறு என்று கொள்ள இடமுண்டு. தெற்கில் அமிழ்ந்து போன பஃறுளியாற்றிற்கும் இடைப்பட்டதாயிருந்தது; பின்பு (இடைச் சங்கக் காலத்திலும் கடைச்சங்கக் காலத்திலும்), வேங்கட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/239&oldid=1431808" இலிருந்து மீள்விக்கப்பட்டது