பக்கம்:தேவநேயம் 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசிய லுறுப்புகள் பாவாணர் 223 (திருப்பதி) மலைக்கும் கடல் கொண்ட குமரி (கன்னி) யாற்றிற்கும் இடைப்பட்டதாயிருந்தது. அதன்பின், குமரியாறுங் கடல் கொள்ளப்பட்டுக் குமரிமுனை (Cape Comorin) தெற்கெல்லை யாயிற்று. தமிழகத்தில் சேரநாடு மேற்கிலிருந்தமையால் குடபுலம் என்றும், சோழநாடு கிழக்கிலிருந்தமையால் குணபுலம் என்றும், பாண்டிய நாடு தெற்கிலிருந்தமையால் தென்புலம் என்றும் கூறப்பட்டன. இம் முந்நாடும் தமிழ் நாடேயாயினும், பாண்டிய நாடே சிறந்த தமிழ் வழக்குப் பற்றியும் தமிழ்ச்சங்க விருக்கை பற்றியும். தமிழ்நாடெனச் சிறப்பித்துக் கூறப்பெற்றது. சோழநாடு பாண்டிய நாடு என்னும் பெயர்கள். முறையே சோணாடு பாண்டிநாடு என மருவும். சேரநாடு நெடுமலைத் தொடருடைமையாலும், குறிஞ்சிநில மிகுதியாலும் மலைநாடெனப்பட்டது. தலைச்சங்கக் காலத்தில் இப்போதுள்ள திருவாங்கூர் கொச்சி குடகு மைசூர் என்னும் சீமைகளும், மலபார் தென்கன்னரம் கோயம்புத்தூர் சேலம் என்னும் மாவட்டங்களும், சேரவேந்தன் ஆள்நிலமாயிருந்தன திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், தென்னார்க் காடு, வடார்க்காடு, செங்கற்பட்டு, சித்தூர், நெல்லூர், கடப்பை, அனந்தபுரம் என்னும் மாவட்டங்கள் சோழவேந்தன் ஆள்நிலமா யிருந்தன. புதுக்கோட்டை மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மாவட்டங்களும், திருவாங்கூர்ச் சீமையின் தென் பகுதியிலிருந்த வேணாடும், தெற்கே இந்துமாவாரியில் (Indian Ocean) அமிழ்ந்து போன பெருநிலப் பகுதியும், பாண்டிய வேந்தன் ஆள்நிலமாயிருந்தன. இப்போதுள்ள சீமையெல்லைகளும் மாவட்டப் பிரிவினையும் பெரும்பாலும் ஆங்கில ஆட்சியில் ஏற்பட்டவையாதலின், மேற்கூறிய முத்தமிழ்நாட்டெல்லைகள் மதிப்பாகக் கூறப்பட்டவை என அறிக. ஒருவாறு சுருங்கச்சொன்னால், பொதியமலையிலிருந்து வட பெண்ணையாறு நோக்கி வடகிழக்காக இருப்பது பாகை (Degree) சாய்த்து இழுக்கப்படும் கோட்டால் பிரிக்கப்படும் இருநிலப் பகுதிகளுள், மேலைப்பகுதி முற்றும் சேர நாடாகும்; கீழைப் பகுதியில், புதுக்கோட்டைக்கு வடக்கிலுள்ளது சோழநாடும், அதற்குத் தெற்கிலுள்ளது பாண்டி நாடும் ஆகும். தெற்கில் அமிழ்ந்துபோன குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட தொலைவு எழுநூறு காதம் என்று, சிலப்பதிகார விரிவுரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறியிருப்பதால் பாண்டிநாட்டின் பழம்பரப்பை ஒருவாறு உணரலாம். காதம் என்பது பத்துக்கல் கொண்டதென்றும், மூன்று கல் கொண்ட தென்றும், இருவேறாகக் கூறப்படும். அவற்றுள் குறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/240&oldid=1431809" இலிருந்து மீள்விக்கப்பட்டது