பக்கம்:தேவநேயம் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவாணர்-உருவாக்கம்

பாவாணர்

7


பாவலர் அருள் செல்லத்துரை ஆகியோரையும் இணைத்து அகர வரிசையில் 'தேவநேயம்' அடைவு செய்தலை ஆய்ந்தோம். சிலர் தாங்கள் அடைவுக்கு உதவுவதாகக் கூறித் தனித்தனி நூல்களைக் குறித்தனர்.
தாம் ஏற்றுக் கொண்டவாறு முன்னவரும் பின்னவருமாகிய எவரும் 'மதிப்பூதியமாவது மாண்பணியே' எனத்தொகை விழையாது வினை விழைவாராயினர். ஆகலின் ஒளியச்சு எழுதுதாள் இன்னசெலவன்றி என்ன செலவும் ஏற்படாது தொகை உருவாக்கம் கிளர்ந்தது. பாவலர் பரணனார், முனைவர் நாராயணன், புலவர் தமிழகன், புலவர் குறளன்பன், புலவர் படிக்கராமு, முனைவர் கங்கை ஆகியோர் அடைவு செய்தும் வழங்கினர். முனைவர் திருமாறனார் முனைவர் இளவரசு ஆகியோர் பாவாணர் சொல்வளம் - தனிச் சொற்பொருள் அடைவு செய்து கணினிப் படுத்தி உதவினர்.
நெடுங்காலமாக யாம் அடைவு செய்தவற்றையும் பிறர் இணைப்புகளில் தக்க சிலவற்றையும் அகர முதலாக வரிசைப்படுத்தும் பணி யாம் கொண்டேம். அவற்றுள் ஐம்பான் ஆண்டுப் பல்துறையாக்கச் செய்திகள் மீளவருதலும் முன்னிற் பின்சிறத்தலும் திருத்தம் பெறலும் இயற்கை ஆகலின் அவற்றைக் கண்டு கருத்துருவாக்கம், பொருள்நோக்கு, சொல்லாக்கக் கட்டுக்கோப்பு, என்பவற்றை எண்ணி ஒழுங்குறுத்தலும், கூறியது கூறல் கூடியவரை வாராமல் பேணலும், நிகழ்காலம் மட்டுமே கருதாமல், காலமெல்லாம் கைக்கொள்ளத் தக்கன ஏற்றலும் என்பவற்றை உட்கொண்டே தொகையாக்கம் செய்யப்பட்டதேம்.
சொற்பொருள் விளக்கம், சொற்பொருள் என்பனவற்றுடன் ஆங்கிலப் பகுதி தனிமடலமாக்குதல் வேண்டும் என்றும் கருதினேம்.
பாவாணர் நூல்களின் அடைவு, கட்டுரை அடைவு, தேவநேயம், சொல்லியல் நெறிமுறை என்பன முன் இணைப்புகளாக எம்மால் எழுதிச் சேர்க்கப்பட்டன.
பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் திருமலி கோவலங்கண்ணனார் பதிப்புரை வரைந்து உதவினார்.
'தேவநேயம்' அச்சீடு தொடர்பான கருத்து எழுந்தபோது திருக்குறள் திறவோரும் பொறிஞருமாகிய திரு. பாலகங்காதரனார் தாமே தவச்சாலையில் கணினி அமைப்புச் செய்து தர முன்னுரைத்தார். தவத்திரு கருவூர் அடிகளாரும், புதுவை இயற்கைக் காவலர் ஆசிரியர் வை.வேலாயுதனாரும் தம்மிடம் (கைவயமாக) உள்ள கணினியை வழங்க இசைந்தனர். சிங்கைப் புரவலர் கோவலங்கண்ணனார் தாமே தக்க கருவி விடுப்பதாக உரைத்தார். பேரா. திருஞானம் அவர்கள் அச்சிடுதலுடன் முதல் மெய்ப்புப் பார்க்கவும் நேர்ந்தார். எனினும், தவச்சாலையில் கணினி அமைத்தல், பணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/24&oldid=1481012" இலிருந்து மீள்விக்கப்பட்டது