பக்கம்:தேவநேயம் 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தேவநேயம்

தேவநேயம்


நிறைவேற்றல், மெய்ப்பு முழுவதாகப் பார்த்தல், அச்சீடு- அட்டை கட்டல் ஆகியவை புரிதல் முழு நிறைவாகாது என்னும் எம் பட்டறிவால், இத்தகு பணியிலேயே ஆழங்கால் பட்டவரும், பாவாணர் அடங்கல் அனைத்தையும் ஒருங்கே வெளியிட்டவரும், கருவி நூல் வெளியிடல் தம் பணியெனக் கொண்டவரும் ஆகிய தமிழ்மண் பதிப்பக நிறுவனர் திரு. கோ. இளவழகனாரிடம் அச்சீட்டுப் பணியை ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. புரவலரும் அது பொருந்துமென ஏற்றுப் பொறுப்பை ஒப்படைக்க இசைந்தார்.
திருவள்ளுவராண்டு 2034 ஆடித்திங்கள் 11ஆம் நாள் (கி.பி.24.04.2003 ஞாயிறு) திரு.இளவழகனாரிடம் அச்சுப்பணி ஒப்படைக்கப்பட்டது. உடனே பணி தொடங்கப்பட்டது.
முதற் பதினாறு பக்கங்கள் அச்சிட்டுப் பார்வைப்படியாகப் பலர் கருத்துக்கு வைக்கப்பட்டது. அச்சு அமைப்பு, எழுத்து அமைப்பு பற்றிய முன்னோட்ட ஆய்வு அது.
அறக்கட்டளை அமைப்புக் குழுவினரொடு தக்கார் சிலரும் கருதப்பெற்றனர். கழக அமைச்சர் இரா. முத்துக்குமாரசாமி, பேரா.முனைவர் பொற்கோ, பொறிஞர் பாலகங்காதரனார், தவத்திரு. சூசைமாணிக்க அடிகள் ஆயோர் தக்க கருத்துதவினர். முனைவர் தமிழண்ணல் உவந்து ஊக்கினார். முனைவர் அரண முறுவல் அமைப்பு முறையை முறைப்படுத்துதலில் அழுத்தமாக ஈடுபட்டு உடனாகித் திட்டப்படுத்தினார். மெய்ப்புப் பார்க்க முனைவர் திருமாறன், முனைவர் அரணமுறுவல், முனைவர் இளங்கோ , முனைவர் ப.கங்கை , திரு. மதிவாணன் ஆகியோர் இசைந்தனர். திசம்பர் 2003 நிறைவுக்குள் அச்சுப்பணி நிறைவுற வேண்டும் என்னும் திட்டம் சுணக்கமாகா வகையில் நிறைந்தது. தமிழ்மண் பதிப்பக நிறுவனர் திரு.இளவழகனார் தமிழ்க் காவலர் கோவலங்கண்ணனார் ஆகிய இருவர் ஒத்துழைப்பும் எண்ணுதோறும் இனிப்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/25&oldid=1481014" இலிருந்து மீள்விக்கப்பட்டது