பக்கம்:தேவநேயம் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவாணர்

9


பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள்
07.02.1902 சங்கரநயினார் கோயிலில் ஞானமுத்தர் பரிபூரணத் தம்மையார் ஆகிய பெற்றோர்க்குப் பத்தாம் மகவாகப் பிறந்தார்.
1906 தந்தையார் இயற்கை எய்துதல்; அடுத்தே அன்னையாரும் இயற்கை எய்துதல், சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் 'யங்' துரை என்பார் காப்பில் தொடக்கக் கல்வி பயிலல்.
1912 வடார்க்காடு மாவட்டம் ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில் பயிலல்.
1916 பாளையங்கோட்டைத் திருச்சவை விடையூழிய (C.M.S) உயர்நிலைப்பள்ளி.
1919 முறம்பில் ஆசிரியப் பணி; ஆறாம் வகுப்பு ஆசிரியர் (ஈராண்டு)
1921 ஆம்பூர் பள்ளியில் தமிழாசிரியர் (மூன்றாண்டு)
1924 மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வில் தாம் ஒருவராக வெற்றி பெறல், "ஞா.தேவநேசக் கவிவாணன், மிஷன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர், வடார்க்காடு ஜில்லா" என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22)
1924 சென்னை, பிரம்பூர் கலவல கண்ணன் உயர்நிலைப் பள்ளி
1925 சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப் பள்ளி
1926 சென்னை, தாம்பரம் கிறித்தவ உயர்நிலைப் பள்ளி (மூன்றாண்டு) திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித் தமிழ்ப் புலவர் தேர்ச்சி. (செந்.செல். 4:336) பெறல், வித்துவான், கீ.க, தேர்வு (B.O.L) தேர்ச்சி எசுந்தர் அம்மையார் திருமணம். ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்; தத்தாகத் தரப்படுதல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/26&oldid=1481017" இலிருந்து மீள்விக்கப்பட்டது