பக்கம்:தேவநேயம் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 தேவநேயம் தேவ நேயம் 1929 மன்னார்குடிப் பின்லேக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி (ஆறாண்டு ). 1930 தேவநேயர் -நேசமணியார் திருமணம். 1931 'மொழியாராய்ச்சி' - ஒப்பியன் மொழி நூல்' என்னும் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளி வருதல். 1934 திருச்சி பிசப்பு ஈபர் உயர்நிலைப்பள்ளி (ஒன்பதாண்டு), 1935 திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் தலைப்பில் கீ.க.மு. (M.O.L.) பட்டத்திற்காக இடு நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வழங்குதல். 1935 இடுநூல் பல்கலைக்கழகத்தால் தள்ளப்படுதல். “இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடு வேன்” என உறுதி கொள்ளல், 1940 ஒப்பியன் மொழி நூல் வெளியிடுதல், 1943 சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப்பள்ளி (ஓராண்டு) தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு (21.10:43) தொல்காப்பியக் குறிப்புரை வரைவு. 1944 சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் (பன்னீராண்டு) ஏந்தாக வாழ்தல், 1947 பெரியார் வெள்ளிப் பட்டயம் வழங்கிப் பாராட்டல் 1952 தமிழ் முதுகலைப் பட்டம் (எம்.ஏ) பெறுதல். 12.07.1956 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திரவிட மொழி யாராய்ச்சித் துறை (ஐந்தாண்டு). 24.09.196! காட்டுப்பாடியில் வாழ்வு. 27.10.1963 மனைவியார் நேசமணி அம்மையார் இயற்கை எய்துதல், 12.01.1964 தமிழ்ப்பெருங்காவலர் விருது; தமிழ்க் காப்புக் கழகம், மதுரை 06.10.1956 உத.க. தோற்றம்; திருச்சிராப்பள்ளி 08.09 1967 மணிவிழா, மதுரை 28.12.1969 உ.த.க. முதலாண்டு விழா, பறம்புக்குடி 09.01.1971 உத.க.இரண்டாம் விழா, மதுரை 05.05.1971 குன்றக்குடி அடிகளார் பாரி விழாவில் 'செந்தமிழ் ஞாயிறு' விருது வழங்குதல் 31.12.1972 தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடு, தஞ்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/27&oldid=1431208" இலிருந்து மீள்விக்கப்பட்டது