பக்கம்:தேவநேயம் 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

258 தேவநேயம் அவரை (3) அயல்நாட்டு (சீமை) அவரை = மருதங்காய் போன்ற வடிவுள்ளதும் நீண்டதுமான வெளிநாட்டுக் காய்வகை; a kind of foreign vegetable, அயல் நாட்டை அல்லது மேல் நாட்டைப் பொது மக்கள் 'சீமை' என்னும் வடசொல்லாற் குறிப்பர். இங்கு வடசொல் என்றது வடநாட்டுச் சொல்லை. (4) சீனியவரை - கொத்தவரை - குத்தவரை = கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்வ கை ; a species of pulse whose fruits are in bunches. (5) சுடலையவரை = சுடுகாட்டுப் பக்கத்தில் இயற்கையாக விளைவதும், சீனியவரை போன்றதும், உண்ணப் படாததுமான காய்வ கை ; a species of inedible bean growing wildly near burning grounds. இது பேயவரையெனவும்படும். (6) பாடவரை - வாளவரை - தம்பட்டவரை - சாட்டவரை = வாள் போல் நீண்டு பட்டையாக விருக்கும் காய்வகை; sword-bean, canavalia ensiformis. இனச்சொல் அவரை தெலுங்கு) சிக்குடு, கன்ன டம்) அவர, அவரி, ஆவரே, அமரே; மலையாளம்) - | அவர, அமர கோ(த்தம்) துட(வம்) எவிர் (f); துளுவம்) அவரெ, அபரெ, lablab vulgaris அவடெ அபடெ ஆவடெ (a kind of bean) அவரைக்காய் என்பது மலையாளத்தில் அவரக்க எனத் திரிந்துள்ளது. அமரக்க என்பது அவரக்க என்பதன் திரிவு, துளுச் சொற்களுள் ரகரமுள்ளவை ஒருவகையையும் டகர முள்ளவை மற்றொரு வகையையும் குறிப்பனவாகப் பரோ எமனோ திரவிட அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத் துளு அகரமுதலியில் அங்ஙனங் குறிக்கப்பட வில்லை . இணைமொழி அவரை துவரை, சிறப்புக் குறிப்பு அவரை கொய்யுத ரார மாந்தும் புறம் 2155 சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு (புறம். 335:5) என்னும் புறப்பாட்டடிகள், பண்டைக் காலத்தில் அவரையும் காட்டில், மொச்சைபோல விளைக்கப்பட்ட தென்றோ, அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/275&oldid=1431992" இலிருந்து மீள்விக்கப்பட்டது